சாப்பிடும்போது இடையிடையே தண்ணீரைக் குடிக்காதீங்க..! ஏன்னு தெரியுமா?

சிலர் சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பார்கள். இது பலருக்கும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. பெரிய அளவில் தொப்பை, நெஞ்செரிச்சல் உண்டாகவும் காரணமாகிறது. இது தெரியாமல்தான் பலரும் அவதிப்படுகிறோம். சாப்பாடுக்கு இடையில் தண்ணீர் குடித்தால்…

drinking water

சிலர் சாப்பிடும்போது அடிக்கடி தண்ணீர் குடிப்பார்கள். இது பலருக்கும் பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குகிறது. பெரிய அளவில் தொப்பை, நெஞ்செரிச்சல் உண்டாகவும் காரணமாகிறது. இது தெரியாமல்தான் பலரும் அவதிப்படுகிறோம். சாப்பாடுக்கு இடையில் தண்ணீர் குடித்தால் அப்படி என்ன பிரச்சனைன்னு பாருங்க.

உண்ணும் உணவு உமிழ்நீருடன் அரைக்கப்பட்டு உணவுகுடலுக்குள் செலுத்தப்படுகின்றது.அங்கே உண்ணப்பட்ட உணவு ஏற்கனவே உணவுடன் கலந்துவரும் உமிழ்நீருடன் சேர்ந்து செரிமாணமாவதற்காக செரிமான திரவங்கள் /அமிலங்கள் இருக்கும்.

நாம் உண்ணும் சமயமோ அல்லது உணவு உண்டுமுடித்த உடனேயோ நீரை அதிகமாக குடித்தால் செமிப்பதற்கு தேவையான அமிலங்கள் நீர்த்து விடும். அதனால் செரிமானக்குறைவுகள் ஏற்படும்.அதனால் தான் உணவுடனோ,அல்லது உணவு உண்டுமுடித்த உடனேயே அதிகளவு நீரை குடிக்கவேண்டாம் என்கின்றார்கள்.

அவ்வாறு அதிகளவு நீரை குடித்தால் தொப்பை விழும் அபாயமும் உண்டு. தொப்பை வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் ஒவ்வொருமுறை உணவு உண்டு முடித்தவுடன் நீரை அருந்தி ஆசையை நிறைவேற்றிக்கொள்ளலாம். மேலும் இருவேளைஉணவு உண்டவுடன் குளிர்பானம் அருந்தினால் இன்னும் விரைவில் தொப்பை கண்டிப்பாக அதிகரிக்கும்.

மேலும் பசி எடுத்து அதிகநேரமாகியும் உணவருந்தாவிட்டால் உணவை செமிக்க தயாராகவிருக்கும் அமிலங்கள் உணவு குடல்களையும் ,அதன் பாதைகளையும் பாதிப்பது தான் நெஞ்செரிச்சல் அல்சர் போன்றவை. அதனால் உணவை அதனதன் நேரத்தில் சாப்பிடுங்கள்.சிறிதளவு நீர் உணவுக்கு முன்னும்,உணவுக்கு பின்னும் எடுத்துக்கொள்ளுங்கள். உணவுக்கு பின்னர் குளிர்பானங்கள் தவிருங்கள். உடல் நலம் பேணுங்கள்.