செம! இந்த ஒரு ஜுஸ் போதும் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்…!

Published:

அனைவருக்கும் பழங்கள் பிடித்தமான ஒன்றாக இருந்தாலும் பெரும்பாலானோர் பழங்களை கடித்து சாப்பிடுவதைவிட ஜூஸாக  அருந்துவதையே அதிகம் விரும்புகிறார்கள். கடையில் கிடைக்கும் ஜுஸ்களை விட பிரஷ் ஜூஸ்கள் உடலுக்கு மிகவும் நன்மை தரும். அதுவும் இந்த ஒரே ஒரு ஜூஸ் நமது சருமம் உடல் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என்றால் நம்ப முடிகிறதா?

apple 1834639 1280

ஆம் அதுதான் ABC ஜூஸ்

ஆப்பிள், பீட்ரூட், கேரட் இவைகளை சேர்த்து செய்யப்படும் இந்த ஜூஸானது நம் உடல் உள்ளுறுப்புகளை சரி செய்து பல்வேறு உடல் நலக் கோளாறுகளை நிவர்த்தி செய்ய பெரிய துணை புரிகிறது அதுமட்டுமின்றி நம்முடைய சரும ஆரோக்கியத்திலும் அதிக அளவில் நன்மை தரக்கூடிய ஒரு ஜூஸ் ஆகும்.

beetroot 3490809 1280

ABC ஜூஸ் செய்வது எப்படி?

  • ஆப்பிள் பீட்ரூட் கேரட் இவைகளை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்
  • கழுவிய பழங்களை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
  • சிறிதளவு எலுமிச்சம் சாறை பிழிந்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பருகலாம்.
  • இதனை வடிகட்ட வேண்டிய அவசியம் இல்லை அப்படியே பருகலாம்.

வாயுத்தொல்லை உடைய நபர்கள் இதில் இஞ்சி சேர்த்தும் பருகலாம்.carrots 2387394 1280

ABC ஜூஸில் உள்ள நன்மைகள்

  • இந்த ஜூஸ் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்தது. மேலும் உடலுக்குத் தேவையான அனைத்து விட்டமின்கள் , இரும்பு சத்து, கால்சியம், மெக்னீசியம் பொட்டாசியம் அனைத்து சத்துக்களும் நிறைந்த பானமாகும்.
  • இரத்த சோகையை நிவர்த்தி செய்வதற்கு ஒரு உகந்த பானம் ஆகும்.
  • தொடர்ந்து பருகுவதால் நம்முடைய முகம் பளபளப்பாக மாறுவதை நாம் கண்கூடாக காணலாம். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் முகப்பருக்கள் ஆகியவற்றை அழித்திட உகந்த பானம்.
  • குடல் ஆரோக்கியத்தில் அதிக நன்மை செய்து செரிமான பிரச்சனையை நீக்கி மலச்சிக்கல் தொந்தரவிலிருந்து விடுபட இந்த ABC ஜூஸ் பெரிதளவில் பயன்படுகிறது.
  • ABC ஜுஸ் கண் தசைகளை நன்கு பலப்படுத்த உதவுகிறது.

மேலும் உங்களுக்காக...