ரூ.20 லட்சம் வாடகை தராமல் வீட்டை காலி செய்த யுவன்.. போலீசில் புகார் அளித்த ஹவுஸ் ஓனர்..!

Published:

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தான் குடியிருந்த வீட்டுக்கு இரண்டு வருடங்களாக வாடகை தரவில்லை என்றும் அதன் மதிப்பு 20 லட்சம் என்றும் வாடகை தராமல் தன்னிடம் சொல்லாமல் வீட்டை காலி செய்துவிட்டார் என்றும் ஹவுஸ் ஓனர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கத்தில் லேக் ஏரியா என்ற பகுதியில் வாடகைக்கு இருந்து வரும் நிலையில் அந்த வீட்டுக்கு வாடகை கடந்த இரண்டு ஆண்டுகளாக கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. வாடகை கேட்கும் போதெல்லாம் போனை எடுக்க மாட்டார் என்றும் நேரில் சென்று கேட்டாலும் தர மாட்டார் என்றும் ஹவுஸ் ஓனர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டை தன்னிடம் எந்தவிதமான தகவலும் தெரிவிக்காமல் காலி செய்து விட்டதாகவும் வீட்டில் சில பகுதிகள் டேமேஜ் ஆகி இருப்பதாகவும் எனவே தனக்கு சேர வேண்டிய 20 லட்சம் வாடகை மற்றும் வீட்டு டேமேஜ்க்கான மராமத்து செலவை யுவன் சங்கர் ராஜாவிடமிருந்து பெற்று தர வேண்டும் என்றும் ஹவுஸ் ஓனர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

இந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் யுவன் சங்கர் தரப்பின் விளக்கத்தை கேட்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...