பிரபல யூடியூபர் செஞ்ச வேலையை பார்த்தீங்களா? நெறஞ்ச மனசு சார் உங்களுக்கு..!

By John A

Published:

ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்ட வீட்டில் சும்மா இருந்தவர்களை Content Creator களாக மாற்றச் செய்தது டிக்டாக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்கள் தான். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ நெட்வொர்க் இந்தியாவில் பெரும் தகவல் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த பலர் யூடியூப்பில் வீடியோக்களை பதிவேற்றி வருமானம் ஈட்டத் தொடங்கினர்.

மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருந்தே ரீல்ஸ், வீடியோக்கள் போட்டு பிரபலமடைந்தவர்கள் ஏராளம். அந்தவகையில் யூடியூப் சேனல் மூலம் பிரபலமானவர்தான் ஆரிப் ரஹ்மான். சென்னையைச் சேர்ந்த இவர் கடந்த 2018-ம் ஆண்டு Aarif’s Mind Voice என்ற யூடியூப் சேனலைத் துவக்கி கிட்டத்தட்ட 43 லட்சம் சப்ஸ்கிரைபர்களை வைத்துள்ளார்.

80 வருடங்களுக்கு முன்பே 1 லட்சம் சம்பளம் வாங்கிய நடிகை… வாயடைத்துப் போன ஹீரோக்கள்!

போகிற போக்கில் Food வீடியோக்களை எடுத்து அதை மக்கள் இரசிக்கும்படியாக Content ஆக உருவாக்கி சேனலில் பதிவிடுவது தான் இவரின் சிறப்பம்சம். தற்போது ஆரிப் ரஹ்மான் இந்தியா முழுவதும் சுற்றி பல்வேறு இடங்களில் கிடைக்கும் தனித்துவ உணவுகளையும், தெருவோர உணவுகளையும் பற்றி Review செய்து வருகிறார். இவரின் Review-ஆல் பிரபலமடைந்த ஹோட்டல்கள், தெருவோரக் கடைகள் ஏராளம்.

தற்போது ஆரிப் ரஹ்மான் செய்த செயல் ஒன்று அவரது Subscribers -களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்து. வெறும் வீடியோ போட்டோமா, சம்பாதித்தோமா என்று மட்டுமில்லாமல் தனது சொகுசு காரை விற்று HIV நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், முதியவர்களுக்கு அவர்களும் சந்தோஷமாக தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் புத்தாடைகள் இனிப்புகள் பட்டாசுகளை வாங்கி அவர்களின் முகத்தில் புன்னகை பரவச் செய்துள்ளார். சுமார் 350 பேருக்கு இந்த சேவையை அவர் செய்துள்ளார். ஆரிப் ரஹ்மானின் இந்த செயலை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

arif

ஏற்கனவே ஹர்ஷாசாய், KPY பாலா போன்ற பலர் உதவிகள் செய்து வரும் நிலையில் ஆர்ப் ரஹ்மானும் அந்த வரிசையில் இடம்பெற்றது மனித நேயத்தை வளரச் செய்துள்ளது. இவருடைய யூடியூப் பக்கத்தின் Banner வாசகம் உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு வளர்த்து விடவும், பச்சக்கிளி போன்ற வடிவேலு வாசகங்கள் நிறைந்திருக்கும். விரைவில் தமிழ்நாட்டின் ஹர்ஷா சாய் ஆக வளர வாழ்த்துக்கள் ஆரிப்.