EVERGREEN பட வரிசையில் இணைந்த ஜெய்பீம் : X தளத்தில் சூர்யா போட்ட நெகிழ்ச்சி டுவீட்

By John A

Published:

கடந்த 1993-ல் தமிழகத்தையை உலுக்கிய இருளர் இனத்தைச் சேர்ந்த செங்கேணி – ராசாக்கண்ணு வாழ்வில் நடந்த கோர சம்பவத்தை அடிப்படையாக வைத்து சூர்யா, மணிகண்டன், ரெஜிமோல், பிரகாஷ்ராஜ், இளவரசு, ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் தமிழ் சினிமா மட்டுமன்றி அரசில் வட்டாரத்தையே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஆக்கியது.

இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில், ஷான் ரோல்டன் இசையில், சூர்யாவின் தயாரிப்பில் உருவான இப்படம் திரையரங்கில் வெளியாகமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் சூர்யாவின் சூரரைப் போற்று படமும் ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்று தேசிய விருதுவரை கொண்டு சேர்த்ததால் சூர்யா ஓடிடி தளத்தின் சினிமா சூப்பர் ஸ்டாராக வலம்வரத் தொடங்கினார்.

2021 தீபாவளியையொட்டி வெளியான ஜெய்பீம் திரைப்படத்திற்கு பல்வேறு அங்கீகாரங்களும், விருதுகளும் அலங்கரிக்க தேசிய விருது கை கூடாமல் போனது ஏன் என்று தெரியவில்லை. சினிமா விமர்சகர்களும், திரையுலகமும் 2021-ம் ஆண்டிற்கான தேசிய விருது பட்டியலில் ஜெய்பீம் இணையும் என எதிர்பார்க்க அது ஏமாற்றமானது. மேலும் ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலிலும் இடம்பிடித்தது.  இருப்பினும் ஜெய்பீம் தனது வெற்றியையும், தாக்கத்தையும் எப்போதும் வெளிப்படுத்தும் என்றால் அது மிகையாகாது.

அர்த்தமே இல்லாமல் வந்த தமிழ் பாடல்கள் : அதுவும் ஹிட் லிஸ்ட்டில் என்னென்ன தெரியுமா?

இந்நிலையில் ஜெய்பீம் வெளியாகி இரண்டு ஆண்டுகளைக் கடந்த நிலையில் X தளத்தில் சூர்யா போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அதில், ”ஜெய்பீம் திரைப்படம் வெளியாகி இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி வருகிற வாழ்த்தும், வெளிப்படுகிற அன்பும் சிலிர்ப்பூட்டுகின்றன. மக்களின் மனதில் நிலைத்திருப்பதே ஒரு சிறந்த படைப்பிற்கான அங்கீகாரம் எனவும், நல் முயற்சியை வரவேற்று கொண்டாடி வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் எனவும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

surya 1

மேலும் அப்பதிவில் திரைப்படம் வெளியாகி தமிழ்நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு கிடைத்திருக்கும் நன்மைகள், எங்கள் படைப்பின் நோக்கத்தை முழுமையடைச் செய்துள்ளது எனவும், அதற்காக முதல்வருக்கும் அரசுக்கும் நன்றி” எனவும் தனது பதிவில் கூறியுள்ளார் சூர்யா.

தற்போது ஜெய்பீம் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதில் நடிகர், நடிகைகளின் சவால் நிறைந்த காட்சிகள் இடம் பெற்று ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...