நடிகர் சிவகுமாரின் தனிப்பட்ட வாழ்க்கையில் பல உதவிகள் செய்த சிவாஜி கணேசன்!

Published:

நடிகர் சிவகுமார் 1965 ஆம் ஆண்டு வெளியான கரங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அன்று தொடங்கி அவரது திரைப்பயணம் இன்று வரை முடியவில்லை, இன்றும் பல திரைப்படங்களில் சிறப்பு தோற்றங்களில், சின்னத்திரை தொலைக்காட்சிகளில் பங்களித்து வருகிறார். இவரின் இரு மகன்கள் ஆன நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்களாக வலம் வருகின்றனர்.

நடிகர் சிவகுமார் கிட்டத்தட்ட 190 திரைப்படங்களுக்கு மேல் நடித்து மக்களிடம் நல்ல மதிப்பை சம்பாதித்து வைத்துள்ளார். அந்த வகையில் நடிகர் சிவக்குமார் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருவருக்கும் இடையேயான நட்புறவு குறித்தும், சிவாஜி அவர்கள் சிவக்குமாருக்கு அளித்த அறிவுரைகள் குறித்தும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிவகுமார் நடிகர் ஆவதற்கு முன் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றார். ஓவியராக 7ஆண்டுகள் பணி புரிந்துள்ளார். அப்போது ஒரு திருமண நிகழ்ச்சிக்காக நடிகர் திலகம் சிவாஜி 1958 இல் புதூருக்கு வந்து தங்கி இருந்தார். அவரை சந்திக்க சிவக்குமார் விரும்பினார். சிவாஜியின் படங்கள் சிலவற்றை வரைந்து எடுத்துச் சென்றார் சிவகுமார். ஆனால் அதற்குள் சிவாஜி சென்னைக்கு புறப்பட்டு சென்று விட்டார்.

இதை அறிந்த சிவக்குமார் உடனே சிவாஜியை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்னைக்கு புறப்பட்டார். ராயப்பேட்டையில் உள்ள சிவாஜி கணேசன் வீட்டில் அவரை நேரில் பார்த்த சிவகுமார் மெய் சிலிர்த்துப் போனார். ராஜா ராணி,வணங்காமுடி, உத்தமபுத்திரன் முதலில் படங்களை பார்த்து சிவாஜி நடிப்பில் மனதை பறிகொடுத்தவர் சிவக்குமார். நிழலில் கண்டவரை நேரில் கண்டதும் மகிழ்ச்சி தாங்கவில்லை. அவர் வரைந்திருந்த படங்களை சிவாஜி இடம் காண்பித்தார்.

சிவக்குமாரின் ஓவியத் திறமையை பாராட்டிய சிவாஜி ஓவியப் பயிற்சி பெறுவதற்காக அவரை மோகன் ஆட் என்ற திரைப்பட விளம்பர கம்பெனியில் சேர்த்து விட்டார். சினிமா தியேட்டர்களில் முன்பு பெரிய பெரிய பேனர்களையும் கட் அவுட்டுகளையும் வைக்கும் பழக்கம் அப்போதுதான் தொடங்கி இருந்தது. வணங்காமுடி படத்திற்காக விலங்கு மாற்றப்பட்ட சிவாஜியின் 80 அடி உயர கட்டவுட்டை சித்ரா தியேட்டரில் அமைத்து பரபரப்பை உண்டாக்கி இருந்தது மோகன் ஆட்.

அனிருத் வீட்டிற்கு மகன், மகளுடன் சென்ற ஷாலினி!

மோகன் ஆர்ட்ஸ் உரிமையாளர் மோகனம், எம் ஆர் சந்தானமும் கூட்டாக பாசமலர் தயாரித்தார்கள். இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பாக சிவகுமார் அவர்கள் ஓவிய கல்லூரியில் சேர்ந்து விட்டார். அதன் பின் தான் ஹீரோவாக நடித்தால் தான் நிலைத்து நிற்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும் வரை திருமணத்திற்கு சிவக்குமார் சம்மதிக்காமல் இருந்தார். ஒருமுறை சிவாஜி கணேசன் டேய் சிவா காலா காலத்தில் கல்யாணம் பண்ணிக்கோ முப்பது வயசு தாண்டியிருச்சு அப்புறம் பொண்டாட்டி மீது பெரிய பிடிப்பு இருக்காது.

பாதி வயசு தனியாக வாழ்ந்துட்டோம் இனி இவ இல்லாட்டி மீதி வாழ்க்கையும் இப்படியே வாழ்ந்திடலாம் என தோன்றும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டுமானால் ஒருவர் இல்லாமல் இன்னொருவர் வாழ முடியும் தான் அப்படிப்பட்ட எண்ணம் வலுவாக இருக்க வேண்டும். சின்ன வயதில் திருமணம் செய்து கொண்டால் மட்டும்தான் இந்த எண்ணம் தோன்றும் என சிவகுமாருக்கு நடிகர் சிவாஜி கணேசன் அவர்கள் குடும்ப வாழ்க்கை குறித்து ஒரு அறிவுரையை கூறியிருந்தார்.

சிவாஜியின் பேச்சைக் கேட்டு நடிகர் சிவகுமார் அவர்களும் திருமணம் செய்து கொண்டனர். அந்த திருமணத்திற்கும் அதன்பின் வரவேற்பு நிகழ்ச்சிக்கும் நடிகர் சிவாஜி கணேசன் மனைவி கமலா அம்மாவுடன் வந்து மணமக்களை ஜோடியாக வாழ்த்தினர்கள். சிவாஜியின் வாழ்த்துக்களை பெற்ற நடிகர் சிவக்குமார் இன்றளவும் திரையுலகில் நல்ல மரியாதை உடன் வாழ்ந்து வருகிறார்.

மேலும் உங்களுக்காக...