ஏ.ஆர்.ரஹ்மானை விட குறைந்த வயதில் இசையமைப்பாளராக மாறிய பிரபலம்.. யேசுதாஸை அறிமுகப்படுத்திய ஜாம்பவான்!

இசைக்கு மொழி, வயது, அனுபவம் எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் வயதில் தன்னுடைய 7 வயதிலேயே தனியாக கஞ்சிரா வாசிக்கும் அளவிற்கு கைதேர்ந்து பின்னாளில் 12 வயதிலேயே தனியாகக் கச்சேரிகளில் வாசிக்கும் அளவிற்கு உயர்ந்தவர்…

Veenai

இசைக்கு மொழி, வயது, அனுபவம் எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் வயதில் தன்னுடைய 7 வயதிலேயே தனியாக கஞ்சிரா வாசிக்கும் அளவிற்கு கைதேர்ந்து பின்னாளில் 12 வயதிலேயே தனியாகக் கச்சேரிகளில் வாசிக்கும் அளவிற்கு உயர்ந்தவர் தான் இசை பிதாமகன் வீணை பாலச்சந்தர். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர்ராஜா ஆகியோர் தங்களுடைய டீன் ஏஜிலேயே தனியாக இசையமைக்கத் துவக்கிவிட்ட நிலையில் அவர்களுக்கும் முன்னதாகவே இசையமைத்தவர்தான் வீணை பாலச்சந்தர்.

இவர் தந்தை தீவிர இசைப் பிரியராதலால் வீட்டிலே எந்தநேரமும் இசை பற்றிய பேச்சும், வாசிப்பும்தான் இருக்குமாம். பின்னாளில் அவருடைய தந்தையின் பழக்கமும் பாலச் சந்தருக்குத் தொற்றிக் கொண்டது. தந்தையின் தூண்டுதலால் தன்னுடைய 7 வயதிலலேயே கல்கத்தாவில் தனியாக மேடையில் இவர் இசைத்த கஞ்சிரா இசை அனைவரையும் வியப்படைய வைத்தது.

அன்று உருவானவர் தான் பின்னாளில் இசை மேதை, வீணை மேதையான வீணை பாலச்சந்தர். தன்னுடைய 10 வயதில் திரையுலகில் கால்பதித்து சீதா கல்யாணம் என்ற படத்தில் காஞ்சிரா வாசித்தும் நடித்தார். அதன்பின் தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆராய்ச்சி மணி, காமதேனு, நாரதன், ரிஷ்யஸ்ருங்கர் போன்ற படங்களில் நடித்துக் கொண்டே பல கருவிகளை இசையமைக்கக் கற்றுக் கொண்டார்.

அஜீத், விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்த இயக்குநர் எழில்… இதெல்லாம் இவர் படங்களா?

12 வயதிலேயே குருநாதரின் துணையின்றி, கர்நாடக இசை தவிர இந்துஸ்தானி இசை, மேற்கத்திய இசையிலும் தேர்ச்சி பெற்றார். இவரது புகழ் உலகமெங்கும் பரவ ஆரம்பித்தது. மேஜிக் மியூசிக் ஆப் இந்தியா, சவுண்ட்ஸ் ஆப் வீணா, இம்மார்ட்டல் சவுண்ட் ஆஃப் வீணா போன்ற இசை ஆல்பங்களை வெளியிட்டு இசைப் பிரியர்களை தன்பக்கம் இழுத்தார்.

பின்னர் திரைத்துறையில், இது நிஜமா, என் கணவர், அந்த நாள், டாக்டர் சாவித்திரி, பூலோக ரம்பை போன்ற படங்களை இயக்கி, நடித்து, தானே இசையமைத்தார். அமரன், அவனா இவன், பொம்மை போன்ற திகில் படங்களையும் இயக்கினார். இதில் பொம்மை படத்தில் இடம்பெற்ற  நீயும் பொம்மை.. நானும் பொம்மை.. என்ற பாடல் மூலமாக இந்திய சினிமாவின் தாலாட்டுக் குரலான யேசுதாஸை பாடகராக அறிமுகப்படுத்தினார் வீணை பாலச்சந்தர்.

பல துறைகளிலும் விறந்து விளங்கிய வீணை பாலச்சந்தருக்கு கிடைக்காத விருதுகளே இல்லை எனும் அளவிற்கு பல விருதுகளைப் பெற்றார். பொம்மை படத்தில் இடம்பெற்ற டைட்டில் கார்டு இன்றளவும் எந்தப் படத்திலும் கையாளப் படாத புது யுக்தி என்பது ஆச்சர்யம்.