அஜீத், விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்த இயக்குநர் எழில்… இதெல்லாம் இவர் படங்களா?

தமிழ் சினிமா உலகில் ரஜினி-கமலுக்கு அடுத்து வளர்ந்து வந்த இரு துருவங்களான அஜீத் – விஜய்க்கு ஆக்சன் படங்களைக் காட்டிலும் குடும்பப் படங்களே அவர்களை அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தது. விஜய்க்கு பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற படங்களும், அஜீத்துக்கு காதல் கோட்டை, ஆசை, நீ வருவாய் என போன்ற படங்களும் மெகா ஹிட்  படங்களாக அமைந்தன. அந்த வகையில் விஜய்க்கும், அஜீத்துக்கும் மீண்டும் திரையுலகில் அடுத்த ரவுண்டுக்குக் காரணமாக அமைந்த படங்கள்தான் துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம்.

இந்த இரு படங்களையும் இயக்கியவர் தான் இயக்குநர் எழில். இரட்டை இயக்குநர்கள் ராபர்ட்-ராஜசேகர், பார்த்திபன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணி புரிந்து பின்னர் விஜய் நடித்த துள்ளாத மனமும் துள்ளும் படம் மூலமாக தமிழ் சினிமா உலகில் இயக்குநர் அவதாரம் எடுத்தார் எழில். அவரது முதல் படமே மாஸ் ஹிட் ஆக அமைந்தது.

இப்படத்தின் பாடல்களும், விஜய், சிம்ரன் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. திரையிட்ட இடமெல்லாம் கூட்டம் அலைமோதியது. இதேபோல்தான் பூவெல்லாம் உன் வாசம் படமும். மேலும் அஜீத் நடித்த ராஜா படமும் இவர் இயக்கியதே.

AK 63 மியூசிக் டைரக்டர் யார் தெரியுமா? வெளியான மாஸ் அப்டேட்

இவ்விரு துருவங்களுக்கும் சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் எழில் தற்போது சினிமாத் துறைக்கு இயக்குநராக அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. திரையுலகில் இவரது பங்களிப்பைப் போற்றும் வகையில் பாராட்டு விழாவும், இவர் இயக்கும் அடுத்த படமான தேசிங்குராஜா-2 படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வருகிற 27-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.

எழில் இயக்கத்தில் வந்த படங்கள் அனைத்திலும் கதையோடு காமெடி இழையோடும். குடும்பங்கள் சேர்ந்து பார்த்து ரசிக்கும்படியாக படங்கள் இருக்கும். உதாராணமாக சிவகார்த்திகேயனை அடுத்த லெவலுக்கு உயர்த்திய மனம் கொத்திப் பறவை, தோல்விப் படங்களாகக் கொடுத்த விமலுக்கு தேசிங்குராஜா, உதயநிதிக்கு சரவணண் இருக்க பயமேன், விக்ரம் பிரபுவுக்கு வெள்ளைக்கார துரை, பிரபுதேவா-சரத்குமார் இணைந்து நடித்த பெண்ணின் மனதைத் தொட்டு, ஜெயம் ரவிக்கு தீபாவளி, விஷ்ணு விஷாலுக்கு வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கவுதம் கார்த்திக் நடித்த யுத்த சத்தம் போன்ற பல ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார் இயக்குநர் எழில்.

தற்போது துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் முப்பெரும் விழாவாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.