கோடி ரூபாய் கொடுத்தாலும் அத மட்டும் செய்யமாட்டேன்.. யோகி பாபுவின் மனசு.. உருகிய ரசிகர்கள்..

By Ajith V

Published:

சினிமாவில் நடிக்க வேண்டுமென்றால் கலராக, கலையாக இருக்க வேண்டும் என ஒரு காலத்தில் கூறி வந்தார்கள். ஆனால், அதனை எல்லாம் 40 ஆண்டுகளுக்கு முன்பாகவே உடைத்து எறிந்த ரஜினிகாந்த், கருப்பாக இருந்தாலும் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்கலாம் என்பதற்கு உதாரணமாக இருந்து இன்று பலரையும் உத்வேகப்படுத்தி வருகிறார்.

அவரை போலவே, இன்று பலரும் உடலின் நிறம், உருவம் உள்ளிட்ட பல விஷயங்களை தாண்டி சினிமாவில் தடம் பதித்து வருகிறார்கள். அந்த வகையில் முக்கியமான ஒரு காமெடி நடிகர் தான் யோகி பாபு. லொள்ளு சபா மூலம் நடிப்பு பயணத்தை தொடங்கிய அவர், அதன் மூலம் முன்னேறி தமிழ் சினிமாவில் அறிமுகமான யோகி பாபு, ஆரம்பத்தில் சந்திக்காத அவமானங்கள் இல்லை.

உடல், முடி உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் தமிழ் சினிமாவில் கோட்பாடுகளுக்கு எதிராக திறமை இருந்தால் சாதிக்க முடியும் என காத்திருந்த யோகி பாபு, பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தை பிடித்திருந்தார்.

ஆரம்பத்தில் மற்ற காமெடி நடிகர்களுடன் இணைந்து தோன்றிய யோகி பாபு, பின்னர் முழு நேர காமெடி நடிகராகவே மாறி விட்டார். வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோரை தொடர்ந்து தற்போது காமெடியனாக வலம் வரும் யோகி பாபு, தனது ஒன் லைனர் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்து வரும் அவர் இல்லாமல் அரிதாகவே தமிழ் படங்கள் வெளியாகி வருகிறது.

காமெடி நடிகராக மட்டுமே இல்லாமல், இன்னொரு பக்கம் காமெடி கலந்து முதன்மை கதாபத்திரங்களில் நடித்து வருவதையும் யோகி பாபு வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில் தர்மபிரபு, கூர்கா உள்ளிட்ட படங்கள் ஒரு நல்ல நடிகனாகவும் யோகி பாபுவுக்கு பெயரை கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, யோகி பாபு முன்னணி கதாபத்திரத்தில் நடித்த போட் என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிம்புதேவன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் யோகி பாபுவுடன் கவுரி கிஷன், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக ஒரு கப்பலில் சிலர் சிக்கிக் கொள்வது தான் கதைக்களம் என்ற சூழலில் அதனை சிறப்பாக கையாண்டிருப்பார் சிம்பு தேவன்.
Boat (2024) Tamil Movie Review Starring Yogi Babu, Gouri Kishan

இதனால், போட் படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மிகவும் உணர்வுபூர்வமாக யோகி பாபு பேசிய விஷயம், ரசிகர்கள் பலரையும் நெகிழ வைத்துள்ளது. போட் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட யோகி பாபுவிடம், ‘கோடி ரூபா கொடுத்தாலும் எந்த வேலையை நீங்கள் செய்யமாட்டீர்கள்?’ என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் தெரிவித்த யோகி பாபு, ‘எவ்வளவு பணம் கொடுத்தாலும் அடுத்தவர்களுக்கு துரோகம் மட்டும் செய்யவே மாட்டேன்’ என உருக்கமாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் உங்களுக்காக...