நள்ளிரவு 12 மணிக்கு போன் போட்ட எம்ஜிஆர்… அதிர்ந்து போன நடிகர்!

By Sankar Velu

Published:

ஒய்.ஜி.மகேந்திரன் எம்ஜிஆர் உடனான தனது நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார். வாங்க என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

ஒய்.ஜி.மகேந்திரன் கமல், ரஜினி காலகட்டத்தில் தமிழ்த்திரை உலகில் கால் பதித்தவர். நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். இதனால் இவர் நடிப்பு பளிச்சென்று இருக்கும். காமெடியில் பின்னிப் பெடல் எடுப்பார். இவர் கமலுக்கு நெருங்கிய நண்பர். கமல், ரஜினி நடித்த பல படங்களில் காமெடியனாக வந்து கலக்குவார்.

சகலகலா வல்லவன் படத்தில் இவர் பூனை மாதிரி பேசி நடிப்பது செமயாக இருக்கும். நாடகநடிகர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத்திறன் கொண்டவர். இன்று வரை நாடகத்தில் நடித்து வருகிறார். சினிமாவை விட தன்னோட நாடகத்துக்குத் தான் டிக்கெட் விலை அதிகம் என்றும் மார்தட்டுகிறார். சினிமாவிலும் அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

இவரது தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி. இவருக்கும் எம்ஜிஆருக்கும் நெருங்கிய நட்பு உண்டு. நாடோடி மன்னன் படத்தை எம்ஜிஆர் எடுத்து பிரிண்ட் போடும்போது இவர் மிகவும் உதவிகரமாக இருந்தாராம். எம்ஜிஆருக்கு தைரியமாகப் பிரிண்ட் போடுங்கள். படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையைக் கொடுத்தாராம். அந்த வகையில் அவருடன் நல்ல நட்பு கொண்டு இருந்தார்.

எம்ஜிஆர் முதல்வரானதும் ஒரு நாள் இவர் எம்ஜிஆருக்குப் போன் போட்டுள்ளார். அதற்கு அவர் எடுக்கவில்லையாம். அவரது செயலாளர் ஒருவர் எடுத்துள்ளார். அப்போது அவர் வந்தா என்னை ஞாபகம் இருக்குதான்னு கேளுன்னு சொல்லிட்டு கோபத்தில் வைத்து விட்டாராம். அன்று நள்ளிரவில் தான் அந்த அதிசயம் நடந்துள்ளது. அதை ஒய்.ஜி.மகேந்திரன் இப்படி சொல்கிறார்.

YGM
YGM

நள்ளிரவு 12 மணிக்கு போன் போட்டு அப்பாவிடம் அப்படிப் பேசினார். ‘என்ன சொன்ன? ஞாபகம் இருக்கான்னு கேட்டே இல்ல. அப்படி ஞாபகம் இல்லாம இருந்தா நான் ஏன் இப்போ உனக்கு போன் பண்ணப் போறேன். இப்போ மணி எத்தனை தெரியுமா? நள்ளிரவு 12 மணி. நான் இருக்குற நிலைமை உனக்குத் தெரியும்.

எனக்கு 10 நிமிஷத்துக்கு ஒரு தடவை போன் வரும். பல பிரச்சனைகளை சந்திக்கணும். அப்படி இருக்கும்போது நான் எப்படி என்னோட தனிப்பட்ட போன்களை அட்டென்ட் பண்ணுவேன்’ என எம்ஜிஆர் கேட்டதும் அப்பா கண்ணுல இருந்து மழமழவென கண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்தது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.