2005 ஆம் ஆண்டு தனது சினிமாப் பயணத்தினைத் துவக்கிய தமன்னா, தற்போது 15 ஆண்டுகள் ஆகியும் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வருகிறார்.
கொரோனா பாதிப்பால் சினிமா உட்பட பல தொழில்கள் நடைபெறவில்லை, அதனால் தமன்னா வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலையிலும், ரசிகர்களுடன் இணைப்பிலேயே இருந்து வருகிறார்.
அவ்வப்போது அழகுக் குறிப்பு சொல்வது, பிட்னஸ் குறிப்புகள் சொல்வது, உடற்பயிற்சிகள் ரீதியான வீடியோக்கள் போடுவது, கொரோனா விழிப்புணர்வு என இருந்துவருகிறார், அந்தவகையில் தற்போது தமன்னா தலைகீழாக நிற்க முயற்சிக்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார்.
இந்த வீடியோ குறித்த முக்கியத் தகவலையும் கூறியுள்ளார். அதாவது, “பல தோல்விகளுக்குப் பின்னரே வெற்றி கிடைக்கும் என்பதைக் கற்றுக் கொண்டேன். துவக்கத்தில் தலைகீழாக நிற்க முயற்சித்து பலமுறை விழுந்து உள்ளேன்.
அடியும் பலமாக விழுந்துள்ளது, எடுத்த முயற்சியில் பின்வாங்காமல் தொடர்ந்து செய்து வெற்றி பெற்றுள்ளேன். இதுபோல் முயற்சிக்க வீட்டில் யாரும் இல்லாமல் தவறான முறைகளில் முயற்சி செய்ய வேண்டாம். பயிற்சியாளரின் துணையோடு செய்வதுதான் சிறப்பான முறையாகும்” என்று கூறியுள்ளார்.