பாக்யராஜ் நடிகர் என்பதைத் தாண்டி மிகச் சிறந்த இயக்குனர் என்றே சொல்லலாம், இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அக்காலத்து இளைஞர்கள் மத்தியில் மாஸ் ஹிட் படங்கள் என்றே சொல்ல வேண்டும். அவர் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் ஆன படங்களில் ஒன்று முந்தானை முடிச்சு.
இந்தப் படத்தினைப் பார்த்திராத அக்காலத்து இளைஞர்கள் என்ற ஒருவர் இருக்கவே மாட்டார் என்றே சொல்லலாம். 90 ஸ் கிட்ஸ்களுக்கு ஓரளவு தெரிந்த இந்தத் திரைப்படம், 2 கே கிட்ஸ்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இந்தநிலையில் பல ஆண்டுகள் கடந்து இப்படம் ரீமேக் ஆகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆமாங்க பாக்யராஜிடம் இதுகுறித்த பேச்சுவார்த்தையும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பாக்யராஜ் கதாபாத்திரத்தில் சசிக்குமார் நடிக்கிறார், ஊர்வசி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இப்படத்தினை தயாரிப்பாளர் ஜேஎஸ்பி.சதீஷ் தயாரிக்கிறார், மேலும் இந்தப் படம் பழைய முந்தானை முடிச்சு படத்தின் ரீ மேக் தானே தவிர, பார்ட் 2 கிடையாது என்றும் கூறப்படுகின்றது.
அதாவது கதையில் பெரிதாக மாற்றங்கள் கிடையாது, அதே கதையினை இக்காலத்திற்கு ஏற்ற வகையில் சொல்லப்போவதாக கூறப்படுகின்றது, படத்தின் பெயரிலும் கூட மாற்றம் இல்லை என்றே கூறப்படுகின்றது.