திடீரென லைகா விடாமுயற்சி அப்டேட்டை வெளியிட என்ன காரணம்?.. பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா!..

By Sarath

Published:

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, அர்ஜுன், ஆரவ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது விடாமுயற்சி திரைப்படம். விடாமுயற்சி படத்தின் அதிகப்படியான காட்சிகள் அஜர்பைஜானில் நடைபெற்று வந்த நிலையில், இனிமேல் படப்பிடிப்பு அங்கே நடைபெறாது என்றும் படக்குழுவினர் சென்னை கிளம்பி உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அஜர்பைஜானில் பனிப்பொழிவு நிலவி வருவதன் காரணமாக அங்கே படப்பிடிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டதால் படக்குழுவினர் சென்னைக்கு திரும்பி விட்டதாகவும் இனியும் காலம் தாழ்த்த தேவையில்லை என்பதற்காக தயாரிப்பு நிறுவனம் வேறு ஒரு இடத்திற்கு படப்பிடிப்பை மாற்ற மகிழ்ச்சி திருமேனிக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது.

லைகா வெளியிட்ட அப்டேட்:

விடாமுயற்சி திரைப்படம் இதுவரை படமாக்கப்பட்ட வந்ததே படக்குழுவினருக்கும் நடிகர் அஜித்குமாருக்கு மனதளவில் எந்த ஒரு திருப்தியும் இல்லை என கூறப்பட்ட நிலையில், லைகா நிறுவனம் அதிகப்படியான தயாரிப்பு செலவை மிச்சப்படுத்துவதற்காகவே படக்குழுவினரை சென்னைக்கு திரும்பி வர உத்தரவிட்டிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், இதுவரை எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் விருந்து வந்த லைகா நிறுவனம் திடீரென்று அஜித்தின் புகைப்படத்தை மட்டும் வெளியிட்டு தற்போது அஜார்பைஜானில் விடாமுயற்சி படத்தின் முதல் கட்ட சூட்டிங் முடிந்து விட்டதாகவும் அடுத்த லொகேஷன் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பதறி அடித்து அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

எச். வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்த அஜித்குமார் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அந்த படத்தை வெளியிட்டார். சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு, விடா முயற்சி டைட்டிலை தவிர்த்து ஒரே ஒரு சூட்டிங் அப்டேட்டை மட்டும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அஜர்பைஜானில் இருந்து பேக்கப்:

மேலும் விடாமுயற்சி திரைப்படம் நிறைவடைய பல மாதங்கள் எடுக்கும் என்றும் இந்த ஆண்டு இறுதிக்குள் தான் விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வரும் இன்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆதிக் ரவிச்சந்திரன் உடன் அஜித் குமார் அடுத்து இணையப் போவதாக வரும் அறிவிப்புகளில் எந்தவொரு அதிகாரப்பூர்வ அப்டேட்டும் இல்லை என்றும் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆன பின்னர் தான் நடிகர் அஜித் அடுத்த படத்தின் கதையை கேட்டு இறுதி செய்வார் என்றும் கூறுகின்றனர். அதற்குள் ஆதிக் ரவிச்சந்திரன், பிரசாந்த் நீல் என அஜித் ரசிகர்களே அப்டேட்களை வெளியிட ஆரம்பித்து விட்டதாக விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மேலும் உங்களுக்காக...