எனக்கு அப்பான்னு கூப்பிடணும்னு தோணுச்சுனா இவருக்கு கால் பண்ணிடுவேன்… கண்கலங்கிய VJ ரக்ஷன்…

Published:

விஜய் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் விஜே ரக்சன். சின்னத்திரை விஜய் தொலைக்காட்சியின் ஹிட்டான ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளியை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர் வி ஜே ரக்சன்.

2017 ஆம் ஆண்டு ‘என் காதல் தேவதை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான ரக்சன், வீடியோ ஜாக்கியாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தில் சின்னத்திரைக்குள் நுழைந்தவர். ஆரம்பத்தில் ராஜ் டிவி மற்றும் கலைஞர் டிவி நிகழ்ச்சிகளில் வி ஜேவாக பணியாற்றிய ரக்ஷனுக்கு கலக்கப்போவது யாரு சீசன் 5த்தில் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி கலக்கப்போவது யாரு சீசன் 5 6 7 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார் ரக்சன்.

கலக்கப்போவது யாரு நகைச்சுவை நடிகர்கள் கூடவே ரக்சன் செய்யும் கலாட்டாக்கள் அனைவராலும் ரசிக்கப்பட்டது. அவரின் எதார்த்தமான பேச்சிருக்கும் சிரிப்பிற்கும் அனைவரும் அந்த நிகழ்ச்சியை ரசித்து பார்த்தனர். அதில் இருந்து குக் வித் கோமாளி தொடங்கியதும் அதற்கு ரக்ஷன் தொகுப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பமனதில் இருந்து இன்று வரை ரக்சன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். செஃப் தாமு, செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் போட்டியாளர்களுடன் ரக்சன் பேசி பழகும் விதமும், நகைச்சுவை செய்யும் விதமும் பார்ப்பதற்கு ரசிக்கும்படியாக இருக்கும். இது மட்டுமில்லாமல் 2020 ஆம் ஆண்டு தேசிங்கு பெரியசாமி இயக்கிய ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து முக்கிய வேடத்தில் துணை நடிகராகவும் நடித்துள்ளார் ரக்சன். இன்னும் பல படங்களில் நடித்தும் வருகிறார் விஜே ரக்சன்.

வி ஜே ரக்ஷனின் தந்தை அவரின் இளம் வயதிலேயே இறந்து விட்டார். தான் தனது தந்தையை மிஸ் பண்ணுவதாக பல மேடைகளில் தெரிவித்துள்ளார் வி ஜே ரக்சன். தற்போது ஒரு நேர்காணலில் தனது தந்தையை பற்றி எமோஷனலாக பேசிய ரக்சன், குக் வித் கோமாளி செட்டில் எனக்கு அப்பா மாதிரி இருக்கிறது செஃப் தாமு அவர்கள் தான். எனக்கு எல்லா விஷயத்திலும் அறிவுரை வழங்குவது எல்லாமே அவர்தான். எனக்கு எப்போதாவது அப்பா இல்லையே நமக்கு அப்படின்னு ஏக்கம் வரும்போது, யாரையாவது அப்பான்னு கூப்பிடனும்னு தோணும்போது உடனே தாமு சாருக்கு கால் பண்ணிடுவேன் என்று கண் கலங்கியபடி பகிர்ந்துள்ளார் விஜே ரக்சன்.

மேலும் உங்களுக்காக...