‘டாக்டர்’ படத்தில் ஓளிந்திருக்கும் ரகசியம் குறித்த தகவல்

By Staff

Published:


549b3c854f57c3bd0ae3a427dcf1d468

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் ’டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று காலை 11.03 மணிக்கு வெளிவந்தது என்பது தெரிந்ததே. இதற்கு முன்னர் வெளியான ’டாக்டர்’ படத்தின் அறிவிப்பு, டைட்டில் லுக், மற்றும் முதல் போஸ்டர் ஆகியவையும் 11.03 மணிக்கு தான் வெளிவந்தது

இதனால் 11.03 மணியில் ஏதோ ஒரு ரகசியம் ஒளிந்திருப்பதாக சிவகார்த்திகேயன் ரசிகக்ரள் கூறி வந்த நிலையில் அது உண்மைதான் என்பது போல் ஒருசில தகவல்கள் கிடைத்துள்ளது

டாக்டர் படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய காட்சி 11.03 மணிக்குத்தான் நடப்பதாகவும் அதனை அடுத்தே இந்த படத்தின் புரமோஷன் அனைத்துமே 11.03 மணிக்கு வெளியாகி வருவதாகவும் கூறப்படுகிறது. 11.03 இல் அப்படி என்ன நடக்கும் என்பதை அறிய சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Leave a Comment