ஏஆர் ரகுமான் நடத்திய கச்சேரி.. காசு ஆட்டைய போடறதுகுன்னே.. குமுறும் நெட்டிசன்கள்

Published:

ஏஆர் ரகுமான் நேற்று ஈசிஆரில் நடத்திய இசைக்கச்சேரி தான் நேற்று மாலை முழுவதும் ஒரே பேச்சாக உள்ளது. ஒரு பக்கம் போக்குவரத்து நெரிசலால் விழி பிதுங்கிப்போன ரசிகர்கள், மறுபக்கம் ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் கச்சேரியை பார்க்ககூட முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். அதிக கூட்டம் காரணமாக வெறும் தலைகளை மட்டுமே பார்த்ததாக நெட்டிசன்கள் பலர் குமுறுகிறார்கள்.

நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட குமுறல் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது பதிவில் உள்ள விஷயம் நியாயம் தானே என கேட்காதவர்களே இல்லை. அப்படி என்னதான் அவர் சொன்னார் என்பதை பார்ப்போம்..

“90ஸ் கிட்ஸ்கிட்டருந்து காசு ஆட்டைய போடறதுக்குன்னே வாரத்துக்கு இரண்டு கான்செர்ட் நடத்துறாங்க இப்பல்லாம். டிக்கட் விலையெல்லாம் குறைஞ்சது இரண்டாயிரம், அஞ்சாயிரம்னு போகுது. ஐம்பதாயிரம் இருபத்தஞ்சாயிரம் டிக்கட் வாங்கினாதான் கொஞ்சமாவது மேடையை பாக்க முடியும். இரண்டாயிரம், அஞ்சாயிரம் குடுத்தா பெரிய ஸ்க்ரீன்ல பாடறது மட்டும்தான் பாக்க முடியும். முன்னெல்லாம் வருஷத்துக்கு ஒன்னு, ரெண்டுதான் நடக்கும்.

சின்ன கச்சேரிலாம் இன்டோர்லதான் பண்ணுவாங்க. வாணி மகால்லயும் காமராஜர் அரங்கத்துலயும்தான் எல்லா கச்சேரியும். சமீபமாதான் இந்த 90ஸ், 2கே கிட்ஸை டார்கெட் பண்ணி இந்த புது கலச்சாரத்தை தொடங்கி காசு புடுங்க ஆரம்பிச்சிருக்காங்க. இது ஒரு நல்லா காசு கொழிக்கிற பிஸினஸ் ஆகிட்டதால ஏகப்பட்ட குட்டி குட்டி கம்பெனிகள் நடத்த ஆரம்பிச்சிருக்காங்க.

முதல்வன் படப்பிடிப்பில் ஹோட்டல்காரரிடம் மாட்டிக் கொண்டு முழித்த ஏஆர்.ரகுமான்! நடந்த சம்பவமே வேற..!

இந்த வருஷம் நடந்த ஒரு கான்செர்ட்லயும் ப்ராப்பர் ப்ளானிங், சீட்டிங் அரேஞ்ச்மென்ட்ஸ் செக்யூரிட்டி, டாய்லெட், டிஹைட்ரேஷன் ஸ்டேஷன்னு ஒரு மண்ணாங்கட்டியும் இருக்கறதில்லை. எல்லா கான்செர்ட்லயும் ஓவர் செல்லிங், பஸ்ட் கம் பஸ்ட் சர்வ் பேஸிஸ்ல சீட்டிங், செக்யூரிடி இல்லாததால ஆளாளுக்கு இடம் மாத்தி மாத்தி உக்காந்து காசு குடுத்து வாங்குனவங்கள நிக்க வைக்கிறது. கேன்சல் பண்ணினா காசு திருப்பி குடுக்கறதில்லை. எதாவது ஆக்ஸிடென்ட்னா போதுமான மருத்துவ வசதிகள், தீயணைப்பு வசதிகள் கிடையாது.

போர்க்களம் மாதிரிதான் நடக்குது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தா கொடூரமான விளைவுகள் இருக்கும். அந்த அளவுக்கு சேப்டி மெசர்ஸ் பாலோ பண்ணப்படுது. எதையுமே பண்ணமாட்டோம் ஆனா டிக்கெட் விலை மட்டும் யானை விலை வச்சு கொள்ளை அடிக்கிறது. இதுல பெரிய குற்றவாளி யார்னா காசு குடுத்து டிக்கெட் வாங்குறவன்தான். இத்தனை அனுபவிச்சாலும் திரும்ப திரும்ப கான்செர்ட் போற மக்கள் மேலதான் தப்பு. ஏமாந்து போறவங்க இருக்குறவரை ஏமாத்துறவங்க அதிகமாகிட்டேதான் போவாங்க.

இதுக்கெல்லாம் எந்த வித கட்டுப்பாடுகளோ விதிமுறைகளோ இருக்கறதா தெரியல. அல்லது இருந்தாலும் அதை ஒழுங்கா இவங்க பாலோ பண்றதாவும் தெரியல. அரசு இந்த மாதிரி நிகழ்ச்சிகள்ல இது இது இருக்கணும், இவ்வளவு ஆட்கள்தான் அனுமதி, இந்தந்த பாதுகாப்பு நெறிமுறைகள் பாலோ பண்ணனும் என ஸ்ட்ரிக்ட் விதிகள் உருவாக்கி நடைமுறைபடுத்தலாம். இல்லாட்டி இந்த கான்செர்ட் வெறி கண்ணையன்கள் ஒருநாள் இல்ல ஒருநாள் பெரிய ஆபத்தை உண்டாக்கிடுவாங்க!” இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் உங்களுக்காக...