நிகழ்ச்சி ஒன்றில் கமலிடம், விவேக் கேள்வி கேட்க, அதற்கு அவருக்கே உரித்தான ஸ்டைலில் தூய தமிழில் பதில் சொன்னார். அதில் ரசிக்கும் வகையில் இருந்த ஒரு கேள்வி, பதில் பற்றி இப்போது பார்ப்போம்.
நடனம், பாடல், இசை அறிவு, நகைச்சுவை, குணச்சித்திரம், சண்டை மற்றும் டெக்னிக்கல் என எல்லாவற்றிலும் வித்வத்துவம் பெற்றவர் நீங்கள். உங்கள் திறமைக்கேற்ற அங்கீகாரத்தை அடைந்து விட்டீர்கள் என்ற எண்ணம் வந்து இருக்கிறதா? இல்லை… என கேள்வியை இழுத்தார் விவேக். அதற்கு கமல் சொன்ன விவேகமான பதிலைப் பாருங்க.
தேவை என்பது மனிதனுக்கு எல்லையில்லாத ஒரு விஷயம். இது போதும் என்ற முடிவு வந்துவிட்டாலே ஞானம் வந்துவிட்டதாக அர்த்தம். எனக்கு எது தேவை என்பதே தெரியாமல் இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். என்பதுதான் உண்மை.
காரணம் இது மட்டும் (ரசிகர்களின் கரகோஷம்) தேவை என்பது தெரிகிறது. இந்த கரகோஷம் தேவை என்பது தெரிகிறது. இதற்கான தகுதிகள் என்ன என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கு அது இருக்கிறதா என்பதை நீங்கள் சொல்லும்போது இருப்பது போன்ற சந்தேகம் வருகிறது.
நான் தனிமையில் இருந்து யோசிக்கும் போதும், என் முன்னோர்களைப் பற்றி சிந்திக்கும் போதும் அந்தத் தகுதி இனிமேல் தான் வர வேண்டும். அதற்கான முயற்சிகளைச் செய்து கொண்டே போனாலும் அது நல்ல முயற்சி தான் என்றார் கமல்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


