விஜய், அஜித்தை வைத்தே விளையாடிய விஷால்.. மார்க் ஆண்டனி வசூல் மழைக்கு மாஸ் ஐடியாதான்!..

By Sarath

Published:

விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே மிகப் பெரிய வசூல் வேட்டையை நடத்திய நிலையில் நேற்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் சக்சஸ் மீட் நிகழ்ச்சியை நடத்தினார்.

வினோத் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா, ரித்து வர்மா, ரெடின் கிங்ஸ்லி, சுனில் மற்றும் அபிநயா உள்ளிட்ட பலர் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் டெலிபோனில் டைம் டிராவல் கான்செப்டில் வித்யாசமாக உருவான நிலையில் அந்தப் படத்தை ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து பார்த்து வருகின்றனர்.

தியேட்டரில் மீண்டும் மக்கள் கூட்டம்:

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்திற்கு பிறகு அட்லியின் ஜவான் திரைப்படத்திற்கு கூட செல்லாத தமிழ் ரசிகர்கள் விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தை பார்க்க தியேட்டர்களுக்கு குவிந்து வருகின்றனர்.

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவருமே இரட்டை வேடங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி அமர்க்களப்படுத்திய நிலையில் டி ராஜேந்தர் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் பாடியது போலவே அதிருது உள்ள அதிரனும் மாமி என்பது போல் தியேட்டர்கள் அதிர்ந்து கொண்டிருக்கின்றன.

மார்க் ஆண்டனி மாபெரும் வசூல்:

மார்க் ஆண்டனி திரைப்படம் சில நாட்களில் அதிரடியாக வசூல் வேட்டையை நடத்திய நிலையில், படக்குழுவினருடன் வெற்றியை கொண்டாடி வருகிறார் விஷால். இந்தப் படத்தை தனக்கு கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும், இந்தப் படத்தின் வெற்றிக்கு தூணாக இருந்த எஸ்ஜே சூர்யாவுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவித்த விஷால் படத்தின் டீசரை வெளியிட்டு ஆரோக்கியமான ஆரம்பத்தை உருவாக்கிய தளபதி விஜய்க்கு எனது நன்றிகள் என பேசியிருந்தார்.

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் துவக்கத்திலேயே தேங்க்ஸ் கார்டும் போட்டு இருந்தார் விஷால்.

விஜய், அஜித்தை வைத்து வசூல் அள்ளிய விஷால்:

நடிகர் விஷால் ஒரு புறம் விஜய்க்கு நன்றி தெரிவித்து விஜய் ரசிகர்களை கவர்ந்த நிலையில், மார்க் ஆண்டனி திரைப்படத்தில் ஏகப்பட்ட அஜித் ரெஃபரன்ஸ் காட்சிகளை வைத்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் ஒரு அஜித் ஃபேன் பாய் என்பதை நிரூபித்து இருந்தார்.

மேலும் நேற்று வெற்றி விழாவில் பேசிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப் படம் வெற்றி அடைந்ததற்கு உதவியாக இருந்த அஜித் குமாருக்கு தெரிவித்துக்கொள்கிறேன் எனக்கு கூறியிருந்தார்.

தூணாக இருந்த எஸ்.ஜே. சூர்யா:

சரியாக அஜித் மற்றும் விஜய் பயன்படுத்தி நடிகர் விஷால் தனது மார்க் ஆண்டனி திரைப்படத்தின் பிஸினஸை செய்துவிட்டார் எதை நெட்டிசன்கள் தற்போது மீம்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

மார்க் ஆண்டனி படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யாவிடம் இருந்து நிறைய நடிப்பு பயிற்சிகளை கற்றுக் கொண்டேன் என்றும் இந்த படத்தின் ஓபனிங் காட்சியில் மார்க் ஆண்டனி வேர்ல்ட் பற்றி நரேஷனை கொடுத்த நண்பன் கார்த்தி மற்றும் அதிருதா பாடலை பாடிக் கொடுத்த டி. ராஜேந்தர், சில்க் ஸ்மிதாவை மீண்டும் திரையில் கொண்டு வர உதவிய நடிகை விஷ்ணுப்பிரியாவுக்கும் நன்றி தெரிவித்திருந்தார் விஷால்.

மேலும் உங்களுக்காக...