விருமாண்டி ஷூட்டிங்- கமல் மனிதாபிமானம் பற்றி காதல் சுகுமார்

ஆரம்ப காலத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காமெடி ஷோ தொகுத்து வழங்கியவர் சுகுமார். காதல் படத்தில் கதாநாயகன் பரத்தின் நண்பனாக கரட்டாண்டியுடன் வம்பிழுக்கும் நபராக நடித்தவர் அதன் மூலம் புகழடைந்தார். அதற்கு முன்பே வந்த…

ஆரம்ப காலத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் காமெடி ஷோ தொகுத்து வழங்கியவர் சுகுமார். காதல் படத்தில் கதாநாயகன் பரத்தின் நண்பனாக கரட்டாண்டியுடன் வம்பிழுக்கும் நபராக நடித்தவர் அதன் மூலம் புகழடைந்தார்.

37a54fb0cbb9c2a0c74f5657760dcd18-1

அதற்கு முன்பே வந்த விருமாண்டியில் கமலுடனும் நடித்துள்ளார் ஒரு படத்தை இயக்கியும் உள்ளார் இவர். கமல் பற்றி அவர் கூறியதாவது.

விருமாண்டி படத்துக்காக ஒரு காட்சி எடுக்க ஒரு பள்ளிக்கூடத்தை தேர்ந்தெடுத்த கமல் அங்கு ஷூட்டிங் எடுக்க சென்றாராம். அங்கு வகுப்பு நடந்து கொண்டிருந்ததாம். வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது என்று படக்குழுவினர் சொன்னார்களாம். நான் முன்னாடியே பேசி இருந்தேனே சனி, ஞாயிறு விடுமுறை என்று சொன்னார்களே என கூறினாராம். ஆமா சார் விடுமுறைதான் இருந்தாலும் ஸ்பெஷல் கிளாஸ் திடீர்னு வச்சிருக்குறாங்க வாங்க நாம கேட்போம் என்றதற்கு , நான் ஒருத்தன் படிக்காம இங்க குப்பை கொட்டிக்கிட்ருக்குறது பத்தாதா வேணாம் படிக்கட்டும் என ஸ்பெஷல் கிளாஸ் முடியும் வரை வெயிட் செஞ்சுதான் அந்த காட்சி படம் பிடிக்கப்பட்டதாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன