விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகிய இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள். இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்து சினிமா வாய்ப்புகளை தேடிக் கொண்டிருந்த நிலையில் தான் விஜயகாந்த் சின்ன சின்ன வேடங்கள் கிடைத்து பிரபலமானார்.
அந்த வகையில் தயாரிப்பு தொழிலில் ஈடுபட வேண்டும் என்று உறுதியாக இருந்த இப்ராஹிம் ராவுத்தர், தயாரிப்பு நுணுக்கங்களை கற்று கொண்டு முதல் முதலாக விஜயகாந்த் நடித்த ’உழவன் மகன்’ என்ற திரைப்படத்தை தயாரித்தார்.
ஏற்கனவே ஆபாவாணன் மற்றும் ஆர்.அரவிந்தராஜ் இணைந்து விஜயகாந்தின் ஊமை விழிகள் என்ற படத்தை உருவாக்கி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதே ஜோடியை மீண்டும் இணைத்து இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்த படம் தான் உழவன் மகன்.
அவர போல நடிகர் இங்க யாரும் இல்ல… எம்ஜிஆர் கிட்டயே சிவாஜியை புகழ்ந்த வாலி… என்ன சொன்னார் தெரியுமா..?
இந்த படத்தில் விஜயகாந்த், ராதிகா, ராதா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற ரேக்ளா ரேஸ் காட்சிக்கு மட்டும் அந்த காலத்திலேயே பல லட்சங்களை செலவழித்தார் இப்ராஹிம் ராவுத்தர். அடுத்து விஜயகாந்த் நடித்த பரதன், ராஜதுரை, கருப்பு நிலா, போன்ற படங்களை இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்தார்.
விஜயகாந்த் மட்டுமின்றி வேறு சில நடிகர்களின் படங்களையும் அவர் தயாரித்தார். குறிப்பாக பார்த்திபன் நடித்த தாலாட்டு பாடவா, சரத்குமார் நடித்த தாய் மொழி, அருண் பாண்டியன் நடித்த ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்ற படங்களை தயாரித்தார்.
இந்த நிலையில் தான் தமிழன்னை சினி கிரியேஷன் என்ற புதிய கம்பெனியை இப்ராஹிம் ராவுத்தர் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் மூலம் தான் விஜயகாந்த் நடித்த பூந்தோட்ட காவல்காரன், பாட்டுக்கு ஒரு தலைவன், என் ஆசை மச்சான், காந்தி பிறந்த மண் போன்ற படங்களை தயாரித்தார்.
குழந்தை நட்சத்திரமாக நடித்து பெரும் பணம்.. இப்போது கூலி வேலை.. நடிகர் ஹாஜா ஷெரிப்பின் கதை..!!
இதில் என் ஆசை மச்சான் மற்றும் காந்தி பிறந்த மண் ஆகிய இரு படங்களும் ஆர் சுந்தர்ராஜன் இயக்கியது. விஜயகாந்தின் மிகப்பெரிய வெற்றிப்படமான புலன் விசாரணை படத்தை தயாரித்தவர் இப்ராஹிம் ராவுத்தர் தான். இந்த படத்தை ஆர் கே செல்வமணி இயக்கியிருந்தார்.
இதனை அடுத்து கேப்டன் பிரபாகரன், சக்கரை தேவன், உளவுத்துறை போன்ற படங்களையும் இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்தார். இதனை அடுத்து நீண்ட காலமாக தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த இப்ராஹிம் ராவுத்தர், விஜயகாந்த் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
2015 ஆம் ஆண்டு அவர் புலன் விசாரணை 2 என்ற படத்தை தயாரித்தார். இதில் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். இதுதான் அவர் தயாரித்த கடைசி படம் ஆகும். இந்த நிலையில் தான் இப்ராஹிம் ராவுத்தர் உடல் நலக்குறைவு காரணமாக 2015 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி காலமானார்.
அவரது மறைவிற்கு விஜயகாந்த் நேரடியாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தனது நெருங்கிய நண்பருக்கு அவர் பிரியாவிடை கொடுத்து அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் திரையுலகில் எத்தனையோ நண்பர்கள் இருப்பதை பார்த்திருக்கலாம்.
ஆனால் ஒரு நடிகர் மற்றும் தயாரிப்பாளர் இவ்வளவு நெருக்கமான நட்புடன் இருந்தது விஜயகாந்த் மற்றும் இப்ராஹிம் ராவுத்தர் ஆகியோர் தான். அந்த நெருக்கமான நட்பின் அடிப்படையில் தான் தமிழ் திரை உலகுக்கு ஏராளமான வெற்றி படங்கள் கிடைத்தது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
