விஜயகாந்த் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த திரைபடங்கள் ஒரு பார்வை!

Published:

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி ஹீரோவாக இருந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். கோடிக்கணக்கான ரசிகர்கள் இவரை கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் இவர் படத்தில் மட்டும் ஹீரோவாக இல்லாமல் தனது ரியல் லைப்பிலும் ஹீரோவாக வாழ்ந்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் தினமும் சாப்பாடு என தன்னை நம்பி வந்த அனைவருக்கும் நல்ல உணவு கொடுத்து தேவையான உதவிகள் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

தமிழ் ரசிகர்கள் விஜயகாந்த்தை கேப்டன் விஜயகாந்த், புரட்சிக் கலைஞர் என அன்பாக அழைப்பது வழக்கம். சினிமாவில் தொடக்க காலத்தில் இவருடன் பல ஹீரோயின்கள் நடிக்க மறுத்துள்ளனர். சில நாட்கள் கடந்த பின்பு விஜயகாந்த் அவர்களின் அன்புள்ளத்தை பார்த்து முன்னணி நடிகைகள் அனைவருமே விஜயகாந்த் உடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்கள்.

விஜயகாந்த் அவர்களின் படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு குறைவே இருக்காது. கிராமத்து கதையாக இருந்தாலும் சரி, இந்தியாவை காப்பாற்றும் இராணுவ வீரனாகவும், போலீஸ் அதிகாரியாக நடித்தாலும் சரி கொடுத்த கதாபாத்திரத்தில் திறமையாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அரிய கலைஞர்தான் விஜயகாந்த்.

அந்த வகையில் நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில் இனிக்கும் இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து பல திரைப்படங்கள் நடித்துள்ளார். தற்பொழுது அவர் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த படங்களின் ஒரு தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

விஜயகாந்த் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த முதல் திரைப்படம் ராமன் ஸ்ரீராமன். பிரசாத் டிகே இயக்கத்தில், பாபு தயாரிப்பில் 1985-ம் ஆண்டு வெளிவந்த ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமாகும். இந்த படத்தில் விஜயகாந்த் அண்ணன், தம்பியாக நடித்திருப்பார்.

உழவன் மகன் – 1987-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் விஜயகாந்த்க்கு பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் அரவிந்தராஜ், தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர். இப்படத்தில் விஜயகாந்த் , ராதிகா , ராதா , ராதா ரவி ஆகியோர் நடித்துள்ளனர். இது 21 அக்டோபர் 1987 அன்று வெளியிடப்பட்டது.இந்த படத்தில் விஜயகாந்த் அண்ணன், தம்பியாக நடித்திருப்பார்.

காலையும் நீயே மாலையும் நீயே – ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1988-ல் இந்த திரைப்படம் வெளியானது. அப்பா, மகனாக விஜயகாந்த் நடித்துள்ளார்.

நல்லவன் – எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் 1988-ல் வெளிவந்த திரைப்படம் தான் நல்லவன். இந்த படத்தில் நம்பியார், ஜனகராஜ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜயகாந்த் அண்ணன், தம்பியாக நடித்திருப்பார்.

விஜய்க்கு ஜோடியாக 2 படங்கள் நடித்தும் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வரும் கௌசல்யாவின் மறுபக்கம்!

பொறுத்தது போதும் – 1989-ம் ஆண்டு வெளியான இந்த படத்திற்கு மு.கருணாநிதி திரைக்கதை, உரையாடல் எழுதி, இயக்குனர் பி. கலைமணி இயக்கியுள்ளார். இதில் விஜயகாந்த், நிரோஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா. இந்த படத்தில் விஜயகாந்த் அப்பா, மகனாக நடித்தித்திருப்பார்.

ராஜதுரை – SA சந்திரசேகர் இயக்கத்தில் 1993-ம் ஆண்டு ஆக்சன் படமாக இந்த படம் வெளியானது. இப்படத்தில் விஜயகாந்த் , ஜெயசுதா , சிவரஞ்சனி , ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் நடித்துள்ளனர், இந்த படத்தில் விஜயகாந்த் அப்பா, மகனாக நடித்தித்திருப்பார்.

கண்ணுபட போகுதய்யா – பாரதி கணேஷ் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு இந்த படம் வெளியானது. இதில் விஜயகாந்த், சிம்ரன் மற்றும் கரண் நடித்துள்ளனர். இந்த படத்தில் விஜயகாந்த் அப்பா, மகனாக நடித்தித்திருப்பார்.

மேலும் சில படங்களில் விஜயகாந்த் இரட்டைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...