100வது படத்தில் படுதோல்வியை சந்தித்த முன்னணி ஹீரோக்கள் யாரு தெரியுமா?

தமிழ் சினிமா பல ஹீரோக்களை பார்த்திருக்கும். ஒரு சில படங்களுக்கு பின் காணாமல் போன பல ஹீரோக்கள் இன்றளவும் உள்ளனர். ஆனால் நூற்றுக்கு மேற்பட்ட படங்கள் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து சாதனை நாயகர்களாக வலம் வருபவர்கள் சில ஹீரோக்கள் தான்.

அந்த வகையில் சில முன்னணி ஹீரோக்கள் நூற்றுக்கு மேற்பட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். அதில் குறிப்பாக அவர் நடித்த நூறாவது படம் வெற்றியா தோல்வியா என்பதுதான் கேள்வி. நூறாவது படம் தோல்வியாக அமைந்த ஹீரோக்களின் படங்கள் லிஸ்ட் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜெமினிகணேசன் என்று சொன்னாலே காதல் மன்னன் லீலைகளுக்கு சொந்தக்காரர் என்று இவர் மீது முத்திரை பதிக்கப்பட்டு இருக்கும். இவர் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட ஜெமினிகணேசன் நடித்த நூறாவது படமான சீதா இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு கைகொடுக்க வில்லை. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாவித்திரி நடித்திருப்பார்.

சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் நடித்தாலும் சில நடிகர்கள் தான் நம்முடைய ஞாபகத்தில் இருப்பார்கள் அந்த வகையில் ஜெய்சங்கரின் நடிப்பை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. அப்படிப்பட்ட இவர் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என்று பல கேரக்டர்களை நடித்து வந்திருக்கிறார் அந்த வகையில் இவர் நடித்த நூறாவது படமான இதயம் பார்க்கிறது என்ற படம் இவருக்கு தோல்வி படமாக அமைந்துள்ளது.

தன்னுடைய 72வது வயதிலும் ஹீரோவாக நடிக்கும் ஒரே நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். எந்த அளவிற்கு சினிமாவில் ஆர்வம் காட்டுகிறாரோ அதே அளவிற்கு கடவுள் பக்தியும் அதிகம் உண்டு. குறிப்பாக ராகவேந்திரா என்றால் இவருக்கு விருப்பமான கடவுள் என்றே சொல்லலாம். அதனாலேயே இவருடைய நூறாவது படமான ஸ்ரீ ராகவேந்திரா படத்தில் அச்சசல் கடவுளாகவே நடித்திருப்பார். ஆனால் இந்த படம் இவருடைய மற்ற படங்கள் போல் வெற்றியை கொடுக்கவில்லை.

கமல்ஹாசன் கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உலக நாயகனாக பெயரும் புகழையும் சம்பாதித்து வைத்துள்ளார். அப்படிப்பட்ட இவருடைய நூறாவது படமான ராஜபார்வை எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்க வில்லை. முக்கியமாக இந்த படம் கமலுக்கு செட்டே ஆகவில்லை என்றும் சொல்லும் அளவிற்கு பெயர் வாங்கியது. அதுவும் இந்த படத்தில் தான் தயாரிப்பாளராக அறிமுகமானார் கமல்ஹாசன். அறிமுகமான முதல் படத்திலேயே நஷ்டத்தை சந்திக்கும் நிலைமை ஆகிவிட்டது.

விஜய்க்கு ஜோடியாக 2 படங்கள் நடித்தும் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வரும் கௌசல்யாவின் மறுபக்கம்!

பிரபு இவருடைய அப்பா சிவாஜி மூலமாக சினிமாத்துறைக்கு அடி எடுத்து வைத்திருந்தாலும் தன்னுடைய விடா முயற்சியுடன் பல படங்கள் வெற்றியாக கொடுத்தார். இவர் நடித்த பல படம் 100 நாட்களையும் கடந்து அதிக லாபத்தை கொடுத்திருக்கிறது. அப்படி இருந்தாலும் இவர் நடித்த 100 வது படமான ராஜகுமாரன் திரைப்படம் தோல்வியை கொடுத்திருக்கிறது.

நடிகர் சரத்குமார் இவர் நடிக்காத கதாபாத்திரமே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ஹீரோவாகவும் வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்த மக்கள் மனதில் இவருக்கான ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார். குடும்ப படங்களில் நடித்து அனைவரது மனதையும் ஈர்த்துவிட்டார். அப்படிப்பட்ட இவர் நடித்த நூறாவது படமான தலைமகன் படுதோல்வி அடைந்தது.