வெளிநாட்டில் இருந்து கொண்டே நிர்வாகிகளை ஆட்டி படைக்கும் விஜய்!

நடிகர் விஜய் வெளிநாடுகளில் உள்ள நிலையில் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது. நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கான பாதை…

vijay makkal iyakkam12

நடிகர் விஜய் வெளிநாடுகளில் உள்ள நிலையில் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றுள்ளது.

நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கான பாதை சமீப காலமாக வேகம் எடுத்துள்ளது. கடந்த கல்வி ஆண்டில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த பள்ளி மாணவ மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் ஊக்க தொகை வழங்கி நடிகர் விஜய் பாராட்டினார்.

இதை தொடர்ந்து அந்த மேடையில் பெரியார், அம்பேத்கர், காமராஜர் ஆகியோரை பின்பற்ற வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்திய அவர் காமராஜர் பிறந்தநாளன்று இரவு பாடசாலைகளை துவக்கி வைத்து வைத்து அரசியல் வாதிகளின் கவனத்தை ஈர்த்தார். இந்த வகையில் நடிகர் விஜய் அரசியலில் ஆர்வம் காட்டி வருவது இவர்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.

அடுத்ததாக அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வரும் விஜய் தற்பொழுது வெளிநாட்டில் விடுமுறையில் உள்ளார். இந்நிலையில் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் விஜய் இல்லாமல் முதல் முறையாக நடைபெறுகிறது.

படப்பிடிப்பில் தளபதி விஜய்யின் தனித்துவம்! உண்மையை உடைத்த பிரபலம்!

மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்க முடிவு செய்துள்ளதாகவும், விஜய் மக்கள் இயக்கத்தின் மீது வழக்குகள் போடப்பட்டால் அதனை சட்டரீதியாக அணுகி வெல்ல வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்ததாக கேரளா மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.