பொக்கிஷம் படத்தில் நடிக்க தயாராக இருந்த விஜய்! வாய்ப்பு பறிபோனது எப்படி?

Published:

தென்னிந்திய திரையுலகில் தளபதி விஜய் தற்பொழுது உச்சம் தொட்ட முன்னணி நடிகராக வலம் வருகிறார். தனக்கென கோடிக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை கைவசம் கொண்டுள்ள விஜய்யின் ஒவ்வொரு படத்திற்கும் மாஸான வரவேற்பும், நல்ல வசூலும் பெற்று வருவது வழக்கம். அந்த வகையில் தளபதி விஜய் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள இந்த லியோ திரைப்படம் அடுத்தமாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இருந்து நா ரெடி என்னும் முதல் சிங்கிள் வெளியான நிலையில் அடுத்த வாரம் இரண்டாவது சிங்கிள் வெளியாக உள்ளது. மேலும் லியோ படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க அத்துடன் 20க்கு மேற்பட்ட நட்ச்சத்திர பட்டாளமே இணைத்து படத்தில் நடித்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68 வைத்து படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஒரு ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். அடுத்த ஹீரோயினாக சிம்ரன் மற்றும் சினேகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் இந்த படத்திற்காக விஜய் அமெரிக்காவிற்கு சென்று தனது முக பாவனைகள், உடல் அமைப்புகளை ஸ்கேன் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். விஜய்யின் அடுத்தடுத்த பட அப்டேட்களுக்காக அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர்.

இந்நிலையில் மாஸ் ஹீரோவாக கலக்கி வரும் விஜய் அவர் சினிமாவில் வளர்ந்து வந்த காலங்களில் பல ஹிட் பட வாய்ப்புகளை நழுவ விட்டுள்ளார். அந்த வகையில் சியான் விக்ரம் நடித்த தூள் பட வாய்ப்பு முதலில் விஜய்க்கு கிடைத்தது தான். அடுத்ததாக விஷால் நடித்த சண்டை கோழி படத்தின் வாய்ப்பை விஜய் மறுத்துள்ளார்.

இதை விட திரையுலகின் மிக முக்கியமான ஒரு இயக்குனர்களில் ஒருவரான சேரன் அவர்களின் 2 படங்கள் வாய்ப்பை விஜய் நழுவ விட்டுள்ளார். அதில் முதல் படம் ஆட்டோகிராப் மற்றொன்று பொக்கிஷம். சேரன் இயக்கம், நடிப்பில் வெளியான இந்த இரண்டு படங்கள் மாஸ் ஹிட் கொடுத்த படங்கள், அதிலும் ஆட்டோகிராப் படம் 210 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி மெகா ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த கதையை விஜய்யிடம் சொல்லும்போது விஜய் அவர்கள் ரொம்ப கவனமாக அந்த கதையை கேட்டதாகவும், ஆனால் எவ்வளவு ட்ரை பண்ணியும் அந்த கதைக்கு டேட் கொடுக்க முடியாததால் ஆட்டோகிராப் படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என சேரன் கூறியுள்ளார். அது மட்டும் கிடையாது விஜய் கதை கேட்கும் போது அவ்வளவு ஷார்ப்பாக இருப்பதாகவும், அவருடைய கவனம் முழுக்க முழுக்க நம்மிடம் கதை கேட்பதில் மட்டும் தான் இருக்கும்.

நாம் சொன்ன கதையை அப்படியே திருப்பி சொல்ல கூடிய அளவுக்கு ரொம்ப கவனமாக கேக்க கூடியவர். இன்னும் சொல்லப்போனால் கதை கேட்கிற விஷயத்தில் விஜய் சார் இன்னொரு சிவாஜி அப்படின்னு நம்ம சேரன் அவர்கள் விஜய்யை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஜோதிகாவும் இல்ல… சிம்ரனும் இல்ல… விஜய் 68 படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் அந்த நடிகை!

அதே மாதிரி பொக்கிஷம் படமும் விஜய் கையை விட்டு நழுவியுள்ளது. அதாவது ஆட்டோகிராப் படத்தில் தான் விஜய்க்கு டேட்ஸ் இல்லை, ஒதுக்க முடியாத நிலையில் படம் கைவிடப்பட்டது. ஆனால் சேரன் சொன்ன பொக்கிஷம் கதை ரொம்பவே பிடித்து விட விஜய் டேட்ஸ் எல்லாம் கொடுத்து விட்டாராம். கிட்டத்தட்ட நான்கு நாட்கள் அவர் கொடுத்தும் கூட சேரன் அவர்களால் விஜய்யை வந்து யூஸ் பண்ண முடியவில்லை.

அப்படியே ப்ராஜெக்ட் தள்ளி தள்ளி போய் வேற வழியே இல்லாம அந்த கதையில் சேரன் நடிக்க வேண்டிய கட்டாயம் வந்து அந்த படம் சேரன் நடிப்பில் வெளியானது. ஆனால் அந்த படம் ஆட்டோகிராப் அளவுக்கு பெரிய ரிச் கொடுக்கவில்லை. முதலில் ஆட்டோகிராப்  படத்தை மிஸ் பண்ணது விஜய், ஆனால் பொக்கிஷம் படத்திற்கு விஜய் டேட் கொடுத்து மிஸ் பண்ணது சேரன்.

ஒரு வேளை பொக்கிஷம் படத்தில் எனக்கு பதிலாக விஜய் நடித்திருந்தால் அந்த படம் ஆட்டோகிராப் மாதிரி மிகப்பெரிய வெற்றி படமா இருந்திருக்கும் அந்த வாய்ப்பை நான் தவறவிட்டேன் என்றும் அது இப்பவும் எனக்கு வருத்தம் தான் என சேரன் பதிவு செய்துள்ளார்.

 

மேலும் உங்களுக்காக...