ஜோதிகாவும் இல்ல… சிம்ரனும் இல்ல… விஜய் 68 படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் அந்த நடிகை!

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக இணைந்து லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் அடுத்த வாரம் வெளியாக உள்ளதாக படத்தின் இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இந்த படம் அடுத்த மாதம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

லியோ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவிற்க்காகவும், அதில் தளபதி விஜய் கூறும் குட்டி ஸ்டோரிக்காகவும் தளபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்து வருகின்றனர். இந்த படத்தில் பல ஆண்டுகள் கழித்து விஜய்க்கு ஜோடியாக திரிஷா களமிறங்கி கலக்கியுள்ளார். மேலும் படத்தில் இருவருக்கும் இடையே ரொமான்ஸ் பாடல் ஒன்று இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

லியோ படத்தை தொடர்ந்து தளபதி விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைந்து படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் விஜய் 68 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் ஹீரோயினாக யார் நடிக்க உள்ளார் என தினம் தினம் பல அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. மகன் விஜய்க்கு ஜோடியாக படத்தில் பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். அப்பா விஜய்க்கு முதலில் ஜோதிகாவை ஹீரோயினாக களமிறக்க படக்குழு முடிவெடுத்தது. எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் இரண்டு பேர் சேர்ந்து நடித்த குஷி படம், அதை தொடர்ந்து நடித்த திருமலை என்னும் ஆக்சன் படம் இரண்டும் மாஸ் ஹிட் அடித்ததால் மீண்டும் இந்த வெற்றி கூட்டணியை அமைக்க முடிவெடுத்தனர். ஆனால் இந்த படத்தில் நடிக்க ஜோதிகா மறுத்துள்ளார்.

ஒட்டலில் வேலை பார்த்து வைரமுத்துவிடம் உதவி எழுத்தாளராக சினிமாவில் நுழைந்த மாரிமுத்து.. இயக்குனராக மாறியது எப்படி?

அதை தொடர்ந்து சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சிம்ரன் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயன் என பல படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் – சிம்ரன் கூட்டணியில் உருவாகும் குத்து பாடலுக்கு மாஸான வரவேற்பு கிடைப்பது வழக்கம். ஆனால் சிம்ரன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என எந்த உறுதியான தகவலும் வெளியாக வில்லை.

இந்நிலையில் இந்த படத்தில் அப்பா விஜய்க்கு ஹீரோயினாக நடிக்க மற்றோரு நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு வருகிறது. 2003ம் ஆண்டு வெளியான வசீகரா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த சினேகாவிடம் பேசுவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் நடிகை சினேகா மற்றும் அவர் கணவர் பிரசன்னா இருவருமே இயக்குனர் வெங்கட் பிரபுவின் நெருங்கிய நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

அதனால் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சினேகா களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...