அஜித், விஜய் இருவருமே நடிக்க மறுத்த கதை.. துணிந்து நடித்த பார்த்திபன்.. சிறப்பு தோற்றத்தில் அஜித்..!

By Bala Siva

Published:

இயக்குனர் விக்ரமனின் உதவியாளராக இருந்த ராஜகுமாரன் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் தான் ‘நீ வருவாய் என’. இவர் தனது முதல் படத்தில் ஹீரோவாக விஜய்தான் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டார். ‘பூவே உனக்காக’ படத்தில் பணிபுரிந்தபோது விஜய்யுடன் நல்ல பழக்கம் என்பதால், தனது முதல் படத்தில் நடிக்க வேண்டும் என விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால் ‘நீ வருவாய் என’ படத்தில் நடிக்க மாட்டேன், வேண்டுமென்றால் இந்த படத்தில் உள்ள சிறப்பு தோற்றத்தில் மட்டும் 15 நாட்கள் நடித்து தருகிறேன் என்று விஜய் கூறினாராம். ஏற்கனவே சிறப்பு தோற்றத்தில் நடிக்கவிருந்த அஜித்திடம் கூறிய போது அவரும் இந்த கதையில் நடிக்க முடியாது என்றும் இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க காதலி ஹீரோவை காதலிக்காமல் ஹீரோவின் கண்ணை மட்டுமே காதலிக்கும் வகையில் இருப்பதால் ஹீரோயிசம் இருக்காது என்றும் கூறி மறுத்துவிட்டாராம்.

விஜய் படத்தை வாங்க மறுத்த விநியோகிஸ்தர்கள்.. துணிந்து வாங்கிய ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு அடித்த ஜாக்பாட்..!

அஜித், விஜய் ஆகிய இருவருமே நடிக்க மறுத்த கேரக்டரில் தான் பார்த்திபன் நடித்தார். இந்த படத்தில் அஜித் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். ‘நீ வருவாய் என’ என்ற திரைப்படம் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியானது.

nee varuvai ena 1

இந்த படத்தின் கதை என்னவென்றால் வங்கி மேலாளாரக கிராமத்திற்கு வந்து தனது எதிர் வீட்டில் தங்கியிருக்கும் பார்த்திபனை தேவயானி விழுந்து விழுந்து கவனிப்பார். ஆனால் அவரை காதலிக்காமல் அவருடைய கண்ணை மட்டும் காதலிப்பார். கண்ணை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள், கண்களுக்கு ஏதும் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அடிக்கடி பார்த்திபனிடம் கூறுவார். இதற்கு ஒரு பிளாஷ்பேக் உண்டு.

அஜித்தும் தேவயானியும் ஒருவரை ஒருவர் காதலிப்பார்கள், திருமணம் நடைபெற இருந்த சமயத்தில் திடீரென ஒரு விபத்தில் அஜித் இறந்துவிட அவர் கண்ணை எடுத்துதான் பார்த்திபனுக்கு வைக்கப்பட்டிருக்கும். இதனால்தான் பார்த்திபனை அவர் காதலிக்காமல் அவருடைய கண்ணை மட்டும் காதலிப்பார். ஒரு கட்டத்தில் பார்த்திபன் தேவயானியை திருமணம் செய்து கொள்ள விரும்பும்போது, தேவயானி எடுக்கும் முடிவு தான் இந்த படத்தின் கிளைமாக்ஸ்.

விஜய், சிம்ரன், ஏஆர் ரஹ்மான், எழுத்தாளர் சுஜாதா இருந்தும் படுதோல்வியான படம்.. விஜய் பேச்சை கேட்காத இயக்குனர்..!

இந்த படத்திற்கு விக்ரமன் இயக்கிய பல படங்களுக்கு இசையமைத்த எஸ்.ஏ.ராஜ்குமார் தான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு தேவதை வந்துவிட்டால், பார்த்து பார்த்து கண்கள், பூங்குயில் பாட்டு ஆகிய பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

nee varuvai ena1

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனை அடுத்து ராஜகுமாரனுக்கு பல வாய்ப்புகள் கிடைத்தது.

அஜித் – சிவாஜி நடிக்க இருந்த படம்.. துரோகம் செய்ய விரும்பாததால் இயக்க மறுத்த இயக்குனர்..!

பார்த்திபன் இந்த படத்தில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இவர் நடித்த கேரக்டரில் அஜித் அல்லது விஜய் நடித்திருந்தால் இந்த படம் இன்றும் பேசப்படும் ஒரு படமாக அமைந்திருக்கும்.