விஜய் படத்தை வாங்க மறுத்த விநியோகிஸ்தர்கள்.. துணிந்து வாங்கிய ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு அடித்த ஜாக்பாட்..!

கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான விஜய் படத்தை பல விநியோகஸ்தர்கள் வாங்க மறுத்த நிலையில், அதுவரை ஜாக்கிசான் படங்களை தமிழில் ரிலீஸ் செய்து கொண்டிருந்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் துணிந்து வாங்கி ரிலீஸ் செய்த நிலையில் அவருக்கு ஜாக்பாட் அடித்தது. அந்த படம் தான் விஜய், ஷாலினி நடித்த ‘காதலுக்கு மரியாதை’.

இயக்குனர் ஃபாசில் மலையாளத்தில் எடுக்கும் படங்களை தமிழில் ரீமேக் செய்வதை வழக்கமான ஒன்றாக வைத்திருந்தார். ‘பூவே பூச்சூடவா’. ‘பூவிழி வாசலிலே’, ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’, ‘வருஷம் 16’ என பல படங்களை அவர் மலையாளத்தில் இருந்து தமிழுக்கு கொண்டு வந்தார்.

விஜய், சிம்ரன், ஏஆர் ரஹ்மான், எழுத்தாளர் சுஜாதா இருந்தும் படுதோல்வியான படம்.. விஜய் பேச்சை கேட்காத இயக்குனர்..!

இந்த நிலையில்தான் அவர் இயக்கிய மலையாள படத்தை தமிழில் உருவாக்க முடிவு செய்தார். ‘காதலுக்கு மரியாதை’ என்று டைட்டில் வைக்கப்பட்ட நிலையில், அந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்ய முயன்றார். ஆனால் சிவகுமார் தானும் இந்த படத்தில் நடிப்பதால் தந்தை மகனாக நானும் சூர்யாவும் நடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். இதை அடுத்துதான் விஜய் இந்த படத்தில் நடித்தார்.

kathalukku mariyadhai1

இந்த படத்தின் தயாரிப்பாளராக பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் இருந்தார். இந்த படம் மிக வேகமாக வளர்ந்தது. ஃபாசில் படம் என்றாலே இளையராஜா இசை தான் என்பதால் இளையராஜா இந்த படத்திற்கு 8 அருமையான பாடல்களை போட்டுக் கொடுத்தார். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பின்னணி இசையும் ஒரு முக்கியக் காரணம். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் குடும்பத்தினர் ஷாலினி வீட்டிற்கு செல்வதும், ஷாலினி மற்றும் அவருடைய அண்ணன்கள் காட்டும் ரியாக்சனுக்கு பின்னணி இசை மிகவும் நன்றாக அமைந்திருக்கும்.

இந்த படத்தை எடுத்து முடித்ததும் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் பல விநியோகிஸ்தர்களிடம் படத்தை வாங்குமாறு கூறினார். ஆனால் ஃபாசில் இயக்கிய முந்தைய படமான ‘கற்பூர முல்லை’ படுதோல்வி அடைந்ததை அடுத்து இந்த படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் தயங்கினர். விஜய்க்கும் அப்போது பெரிய அளவில் மார்க்கெட் இல்லை. தமிழ் திரையுலகின் மிகப்பெரிய விநியோகிஸ்தர் இந்த படத்தை வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் கூறப்படுவது உண்டு.

விஜய்யை பெரிய ஹீரோவாக்கிய தயாரிப்பாளரால் சொந்த மகன்களை ஜெயிக்க வைக்க முடியாத சோகம்..!

ஆனால் இளையராஜா இந்த படத்தின் மீது நம்பிக்கை வைத்து கண்டிப்பாக இந்த படம் சூப்பர் ஹிட் ஆகும் என்று கூறியதால், ஆஸ்கார் ரவிச்சந்திரன் இந்த படத்தை பார்த்தார். இந்த படம் கிளைமாக்ஸ் காட்சிகளுக்காகவே ஓடும் என்பதை முடிவு செய்து அவர் அந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை வாங்கினார்.

kathalukku mariyadhai2

இந்த படத்தின் மொத்த தயாரிப்பு செலவு 90 லட்சம் என்று சங்கிலி முருகன் கூற அதற்கு மேல் ஒரு தொகையை அவருக்கு கொடுத்து தமிழக ஏரியாவை ஆஸ்கார் ரவிச்சந்திரன் வாங்கினார். படம் ரிலீஸ் ஆன இரண்டு நாள் பெரிய அளவில் கூட்டம் இல்லை, ஆனால் இரண்டு நாள் கழித்து மக்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் பரவியதை அடுத்து கூட்டம் அதன் பின் பெரிதானது.

தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடியது. சின்ன சின்ன ஊர்களில் கூட 50 நாட்கள் இந்த படம் ஓடியது. இந்த படம் ஆஸ்கார் ரவிச்சந்திரனுக்கு மிகப்பெரிய லாபத்தை பெற்று கொடுத்தது. அதன் பிறகுதான் அவர் சில திரைப்படங்கள் தயாரிக்கலாம் என்ற முடிவை எடுத்தார்.

அரசியலுக்கு வந்து மண்ணை கவ்விய நடிகர்கள்.. விஜய்க்கு வெற்றி கிடைக்குமா?

இந்த படம் வெளியான பிறகுதான் விஜய்க்கு தமிழ் திரை உலகில் மிகப்பெரிய மார்க்கெட் கிடைத்தது என்பது பலர் அறிந்ததே. ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை அடுத்து அதே விஜய், ஷாலினியை வைத்து ஃபாசில் எடுத்த ‘கண்ணுக்குள் நிலவு’ திரைப்படம் படுதோல்வி அடைந்தது என்பதும் இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...