தமன்னாவுடன் முதல்ல டேட்டிங் போனது எப்போது?.. மனம் திறந்த விஜய் வர்மா!..

Published:

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் நடிகை தமன்னா காவாலா பாடலுக்கு நடனமாடியது அப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம் பிடித்தார். மேலும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் விஜய் வர்மாவுடன் ஜோடியாக நடித்திருந்த தமன்னா அவரை காதலித்து வந்த நிலையில் தற்போது அவர்களின் முதல் டேட்டிங்கை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார் விஜய் வர்மா.

தமன்னாவின் காதலர் பேட்டி:

இந்தி, தமிழ், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் நடித்து இந்திய நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் தமன்னா, தமிழில் கேடி, தெலுங்கில் ஸ்ரீ, இந்தியில் ரோஷன் செஹ்ரா படங்களின் மூலம் அறிமுகமானார். கல்லூரி படத்தின் வெற்றிக்கு பின் தமன்னா தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதை தொடர்ந்து வியாபாரி, படிக்காதவன், அயன், சிறுத்தை, வேங்கை, வீரம், பாகுபலி, தோழா போன்ற பல ஹிட் படங்களில், விஜய், அஜித், தனுஷ், கார்த்திக், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

நடிகை தமன்னா விஷாலின் ஆக்ஷன் படத்தை தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். மேலும் அவர் அப்படத்தில் கவர்ச்சியாக ஆடிய காவாலைய்யா பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. தமிழில் வாய்ப்பை இழந்த தமன்னா இந்தியில் பிஸியாக உள்ளார் பப்ளி பவுன்சர், பிளான் ஏ பிளான் பி, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 என பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் விஜய் வர்மாவுடம் ஜோடியாக நடித்திருந்த தமன்னா அவரை காதலித்து வந்தார். விஜய் வர்மா ஆராம்ப காலத்தில் பல தொடர்களில் நடித்து வந்த நிலையில் ஷோர் என்ற குறும்படம் மூலம் பிரபலமானார். அதை தொடர்ந்து சிட்டகாங் என்ற திரைப்படத்தில் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ரங்ரெஸ், கேங்ஸ் ஆப் கோஷ்ட்ஸ், பிங்க், கோஸ்ட் ஸ்டோரிஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் வர்மா படத்தில் சஸ்யா என்ற ரோலில் நடித்திருந்த விஜய் வர்மா வீமர்சன ரீதியாக பாரட்டுகளை பெற்றிருந்தார்.

இந்நிலையில் விஜய் வர்மா சமீபத்தில் அளித்திருந்த பேட்டி ஒன்றில் தான் தமன்னாவுடன் முதல் முறையாக டேட்டிங் சென்றது பற்றி வெளிப்படையாக பேசியிருந்தார். அதில், லஸ்ட் ஸ்டோரிஸ் படம் நடித்துக்கொண்டிருக்கும் போது நாங்கள் டேட்டிங்க் செல்லவில்லை, மேலும், பார்ட்டி ஒன்றிற்கு பிளான் செய்தோம். ஆனால், அந்த பார்ட்டியில் நான்கு பேர் மட்டுமே கலந்துக்கொண்டனர், அப்போது தான் நான் தமன்னாவிடம் உங்களுடன் அதிக நேரம் ஸ்பெண்ட் பண்ண ஆசைப்படுகிறேன் என்றேன், அதன் பின் 25 நாட்கள் கழித்து தான் நாங்கள் டேட்டிங் சென்றோம் என கூறியுள்ளார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இருவரும் திருமணம் செய்யப் போகின்றனர் என தகவல்கள் பரவி வருகின்றன.

மேலும் உங்களுக்காக...