விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் நடிகைக்கு இப்படி ஒரு சம்பவமா? கண்ணீருடன் பகிர்ந்த சில நினைவுகள்!

Published:

விஜய் டிவியின் ஆல் டைம் ஃபேவரைட் சீரியலான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கேரக்டரில் நடித்து வருபவர் தான் விஜே தீபிகா. இந்த தொடரில் இவரை தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. சமீபத்தில் தீபிகா ஒரு பேட்டியில் தனது வாழ்வில் நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி சில தகவல் வருத்தத்துடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முன்னணி நடிகர் மற்றும் நடன இயக்குனரான ராகவா லாரன்ஸ் படத்தில் தங்கச்சி கதாபாத்திரத்திற்க்கான ஆடிஷன் சமீபத்தில் நடந்த போது அதில் சீரியல் நடிகை விஜே தீபிகா கலந்து கொண்டுள்ளார். அப்போது அவரை வலுக்கட்டாயமாக கிஸ் அடிக்க சொல்லியதாக ஒரு அதிர்ச்சி தகவலை பகிர்ந்து கொண்டார்.

இந்த படத்திற்கான ஆடிஷனில் நடிகர் நடிகைகள் தேர்வு செய்து வந்த அந்த படத்தின் அசிஸ்டன்ட் இயக்குனர் தீபிகாவிடம் இந்த படத்தில் கருப்பாக இருக்கும் ராகவா லாரன்ஸுக்கு வெள்ளையாக ஒரு தங்கச்சி இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்க்கு நீங்கள் தான் பொருத்தமாக இருப்பதாகவும் இந்த படத்தில் நீங்கள் நடிக்கலாம் என கூறியுள்ளார்.

அடுத்த நிமிடமே இந்த படத்தில் அந்த தங்கச்சி கேரக்டருக்கு ஒரு முத்த காட்சி இருக்கிறது. அதை அப்படியே இப்பொழுது எனக்கு நீங்கள் செய்து காட்ட வேண்டும் என அவருக்கு முத்தம் கொடுக்க சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

உடனே தீபிகாவும் யாரும் இல்லாத அந்த அறையில் தன்னிடம் தவறாக பேசுவதை உணர்ந்த அவர் அந்த படத்தின் வாய்ப்பு வேண்டாம் என உதறியுள்ளார். அதற்கு உடனே அந்த படத்தின் அசிஸ்டன்ட் இயக்குனர் நான் ராகவா லாரன்ஸ் அவர்களிடம் பேசுகிறேன், அவர் நான் சொன்னால் கேட்டுக்கொள்வார் நாங்கள் இரண்டு பேரும் ரொம்ப நெருங்கிய நண்பர்கள் என கூறியுள்ளார்.

மேலும் இந்த சீன் உங்களுக்கு வேண்டாம் என்றும் படத்தில் இருந்து நான் அதை தூக்கி விடுறேன், நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என கட்டாயம் செய்துள்ளார். அதன் பின் தீபிகா நான் வேற ஏதாவது காட்சி வேண்டுமானால் நடித்து காட்டவா என கேட்டுள்ளார்.

அதற்கு அந்த அசிஸ்டன்ட் இயக்குனர் உங்களுக்கு முன்னாதாக எட்டு பேரை தான் ஆடிஷன் செய்ததாகவும் அந்த எட்டு பேருமே எனக்கு முத்தம் கொடுத்ததாகவும், ஒருவேளை நீங்கள் மட்டும் இந்த முத்த காட்சியை நடிக்க மறுத்தும் நான் உங்களை தேர்வு செய்தால் நான் அவர்கள் எல்லோருக்கும் செய்யும் துரோகம் என்று கூறியதாகவும் தெரிவித்தார்.

என்னடா ராஜமவுலிக்கு படத்திற்கு வந்த சோதனை! பாகுபலி ஒரு திருட்டு கதையா?

அதனால் ஒரு முத்தம் தானே எனக்கு கொடுத்து விடுங்கள் என அவர் பேச உடனே விஜே தீபிகா அந்த நபரை முறைத்து விட்டு வெளியே வந்ததாகவும் கூறியுள்ளார். தீபிகா தான் பட வாய்ப்புகள் தேடி அலையும் போது கசப்பான நிகழ்வுகள் தனக்கு நேர்ந்திருக்கிறது என சமீபத்தில் பேட்டி ஒன்று புலம்பி தள்ளியிருக்கிறார்.

 

மேலும் உங்களுக்காக...