பிக் பாஸ் 8: கொளுத்தி போட்ட மாதிரி தெரியல.. உண்மைய சொல்லிட்டீங்க.. கலாய்த்த விஜய் சேதுபதி.. பம்மிய அருண்..

By Ajith V

Published:

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப் போகிறது என்றால் அது பற்றிய அறிவிப்பு வந்தாலே ரசிகர்கள் குதூகலம் அடைய தொடங்கி விடுவார்கள். ஆனால் இந்த முறை ஆரம்பத்தில் ஒருவித எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தாலும் ஒவ்வொரு வாரமும் செல்ல செல்ல நிகழ்ச்சி மிக சுமாராக சென்று கொண்டிருப்பதாக தான் பலரும் விமர்சித்து வருகின்றனர். முன்பெல்லாம் பிக் பாஸ் வீட்டின் ஒவ்வொரு நாளிலும் ஏதாவது ஒரு பிரச்சனைகளோ அல்லது சுவாரஸ்யமான சம்பவங்களோ, எமோஷனலான விஷயங்களோ அரங்கேறிக் கொண்டே இருக்கும்.

ஆனால் இந்த முறை அதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாக இருக்க போட்டியாளர்கள் டாஸ்க்கில் ஆடுவதற்கு கூட தயக்கம் காட்டி வருகின்றனர். இதே போல ஏதாவது ஒரு டாஸ்க் அல்லது விளையாட்டிற்காக அவர்கள் போடும் திட்டமிடலும் மிகச் சிறப்பானதாக இல்லை என்பதும் ரசிகர்களின் விமர்சனமாக உள்ளது. இப்படி பல பிரச்சனைகளுக்கு நடுவே பிக் பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் சூழலில் கடந்த வாரம் ஸ்கூலாக மாறி இருந்தது.

பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க்

இதில் பிரின்சிபாலாக வர்ஷினியும், வைஸ் பிரின்சிபாலாக அருண் பிரசாத்தும், மாணவ மாணவிகள், ஆசிரியர், ஆசிரியைகளாக மற்ற போட்டியாளர்களும் களமிறங்கி இருந்தனர். இதற்கிடையே நிறைய மோதல்களும், சண்டைகளும், காதல்களும், எமோஷனலான சம்பவங்களும் அரங்கேறி இருக்க பார்வையாளர்கள் மத்தியிலும் ஒருவித விறுவிறுப்பை பிக் பாஸ் ஸ்கூல் எபிசோடுகள் அதிகப்படுத்தி இருந்தது.
Bigg Boss School Task

நிறைய போட்டியாளர்கள் மாணவ மாணவிகளாக மாறி மாறி சண்டை போட்டுக் கொண்டிருந்த நிலையில் இறுதியில் தான் அது முத்துக்குமரன் உள்ளிட்ட ஒரு சிலரால் பிளான் செய்யப்பட்ட பிராங்க் என்பதும் தெரிய வந்தது. இதனிடையே இந்த பிராங்க் குறித்தும் பிக் பாஸ் ஸ்கூல் டாஸ்க் குறித்தும் பல சுவாரஸ்யமான விஷயங்களை போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி கேட்டு தெரிந்து கொண்டார்.

உண்மைய சொல்லிட்டீங்க..

அப்போது இந்த பள்ளியின் பிரின்சபலாக இருந்த வர்ஷினி விஜய் சேதுபதியிடம், ” ஏன் அந்த டாஸ்க் முடிந்தது என்பது போல் இருந்தது. பிரின்சிபல் கதாபாத்திரம் அந்த அளவுக்கு பிடித்திருந்தது. அதிலும் வைஸ் பிரின்சிபல் (அருண் பிரசாத்) உடன் இருந்தது ரொம்ப பிடித்திருந்தது” என சொல்கிறார்.

இதனை கேட்டதும் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் மட்டுமில்லாமல் விஜய் சேதுபதியும் சத்தமாக சிரித்ததுடன், “ஐயையோ என்னம்மா நீ பாட்டுக்கு சொல்றியே என்று தான் அருண் ரியாக்சன் இருக்கும். போன வாரம் தான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் எல்லாம் சொன்னாரு” என நடிகை அர்ச்சனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்தை அருண் சொல்லியதையும் விளையாட்டாக விஜய் சேதுபதி குறிப்பிடுகிறார்.
vijay sethupathi roast arun

அப்போது பேசும் வர்ஷினி, ‘சும்மா கொளுத்தி போடுவோம் சார்’ என்றதும், ‘இது கொளுத்தி போட்டது மாதிரி தெரியல. உண்மையைத் தான் பேசியிருக்கீங்க’ என விஜய் சேதுபதி சொல்ல ஒட்டுமொத்த அரங்கமும் ஆர்ப்பரிக்க தொடங்கிவிட்டது. முன்னதாக இந்த ஸ்கூல் டாஸ்க்கில் இருவரும் ஜாலியாக காதலிப்பது போல அருண் மற்றும் வர்ஷினி நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.