இந்த கவிதை என் சிந்தனையை மாற்றியது… விஜய் சேதுபதி ஓபன் டாக்…

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தன்னுடைய விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையினால் வளர்ந்தவர். ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த…

vjs

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து தன்னுடைய விடாமுயற்சி மற்றும் நம்பிக்கையினால் வளர்ந்தவர். ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து பீட்சா, தர்மதுரை, சேதுபதி, பண்ணையாரும் பத்மினியும், ரம்மி, விக்ரம் வேதா, ஆரஞ்சு மிட்டாய் போன்ற பல திரைப்படங்களில் வித்தியாசமான கெட்டப்புகளை தேர்ந்தெடுத்து வயசானவர் இளமை என எல்லா கதாபாத்திரங்களிலும் தனது அபாரமான நடிப்பை வெளிகாட்டி குறைந்த காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இடம் பிடித்தவர் விஜய் சேதுபதி.

நடிகராக மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததன் மூலமும் மக்கள் மனதில் இடம் பிடித்தார்விஜய் சேதிபதி. விஜய்க்கு எதிராக மாஸ்டர் போன்ற திரைப்படங்களில் அவர் வில்லனாக நடித்தது பெரிதும் பாராட்டப்பட்டது. அதற்கு அடுத்ததாக சூரியுடன் இணைந்து விடுதலை திரைப்படத்தில் நடித்தார். எவ்ளோ பெரிய நடிகராக இருந்தாலும் மிகவும் யதார்த்தமாக இருப்பவர் விஜய் சேதுபதி. தற்போது பல படங்களில் கமிட்டாகி பிஸியான நடிகராக இருந்துவரும் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், நான் கவிதைகளை அதிகம் படிப்பேன். அதில் முக்கியமாக வண்ணதாசன் எழுதிய எதுவும் தாமதமாகிவிடவில்லை இப்போது தொடங்கினாலும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்லலாம் என்ற கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்த கவிதை படித்த பிறகு தான் பாட்டு கிளாஸ் போய் சேர்ந்து கத்துக்க ஆரம்பிச்சேன் என்று கூறியிருக்கிறார் விஜய் சேதுபதி.