சமீபத்தில் வெளியான ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ’நான் சிரித்தால்’ என்ற திரைப்படத்தின் டீசரில் விஜய்யின் மெர்சல் படத்தின் ஒரு உணர்ச்சி மயமான காட்சியின்போது சிரிப்பது போன்றும், அதேபோல் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் ஒரு காட்சியின்போதும் சிரிப்பது போன்றும் டிரைலரில் உள்ளது
இதனால் ஹிப் ஹாப் தமிழா ஆதி, அஜித் மற்றும் விஜய்யை கேலி செய்வதாக நெட்டிசன்கள் புகார் கூறினார்கள். இந்த நிலையில் சமீபத்தில் இந்த டிரெய்லரை பார்த்த தளபதி விஜய் ’நான் கடந்த சில நாட்களில் பார்த்த ட்ரெய்லர்களிலேயே இதுதான் பெஸ்ட், ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளாராம்
தன்னை கலாய்த்த ஹிப் ஹாப் தமிழா ஆதியை கூட அவர் பாராட்டியுள்ளது விஜயின் சிறந்த குணங்களில் ஒன்று என நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். ஆனால் வழக்கம்போல் எந்தவித கருத்தையும் அஜித் இதுகுறித்து கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது