தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய ’பட்டாஸ்’ திரைப்படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி உள்ள நிலையில் தனுஷ் நடித்துள்ள அடுத்த திரைப்படத்தின் டைட்டில் ’சுருளி’ என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படத்திற்கு சுருளி என்ற டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக இணையதளங்களில் செய்திகள் வெளியானது. இருப்பினும் இந்த தகவலை படக்குழுவினர் மறுத்தனர். இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டில் பிப்ரவரி மாதம் வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்து இருந்தனர்
ஆனால் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இந்த ஆண்டு தங்கள் நிறுவனம் வெளியிட்டுள்ள படங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் படத்தை அந்நிறுவனம் சுருளி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த படத்திற்கு சுருளி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது