ரஜினி, அஜித்துக்கே கிடைக்காத பெருமை.. கோட் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் விஜய் எழுத போகும் சரித்திரம்..

Published:

விஜய் நடிப்பில் தயாராகி வரும் கோட் திரைப்படத்தின் மீது ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்க, அதன் பின்னர் மெல்ல மெல்ல அதன் மீது விமர்சனங்கள் அதிகம் உருவாக ஆரம்பித்து விட்டது. இதற்கு காரணம், கோட் படத்தில் பாடல்கள் பெரிய அளவில் சிறப்பாக இல்லை என்பது தான். இதுவரை விஜய் நடிப்பில் உருவான புதிய கீதை திரைப்படத்தில் மட்டும் தான் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நீண்ட ஆண்டுகளாக விஜய் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் எந்த படங்களும் உருவாகாமல் இருந்து வந்தது. அப்படி இருக்கையில் தான் வெங்கட் பிரபு மற்றும் விஜய் இணைந்த கோட் படத்தின் மூலம் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பாளராக இணைந்திருந்தார். இந்த கூட்டணி மீது எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகமாக, பாடல்களை எதிர்நோக்கியும் ரசிகர்கள் காத்திருந்து வந்தனர்.

ஆனால், இதுவரை வெளியான 3 பாடல்களில் ஒரே ஒரு பாடல் மட்டும் தான் பெரிய அளவில் ஹிட்டாகி உள்ளது. மற்ற இரண்டு பாடல்களும் அதிகம் மீம் ட்ரோல் ஆக மாற, படத்தின் பின்னணி இசையை ரசிகர்கள் எதிர்நோக்க தொடங்கி விட்டனர்.

அதே போல, படத்தின் மீதான எதிர்பார்ப்பும் பாடல்களால் குறைந்து போக, ட்ரைலர் மீது தான் தற்போது அனைவரின் பார்வையும் உள்ளது. கோட் திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பிரசாந்த், அஜ்மல் அமீர், பிரபு தேவா, மைக் மோகன், ஸ்னேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு என பலரும் நடித்து வரும் சூழலில் நிச்சயம் வெங்கட் பிரபு மீதும் ரசிகர்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளனர்.

இதனிடையே, முதல் தமிழ் திரைப்படமாக விஜய்யின் கோட்டிற்கு கிடைக்க போகும் பெருமை ஒன்றை பற்றி தற்போது பார்க்கலாம். ரஜினிகாந்த், அஜித் குமார் என பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் வசூல் ரீதியாக விஜய் முன்னோடியாக இருக்கிறார். அவரது படத்தின் பிஸினஸும் மிகப்பெரிய அளவில் இருக்க, கோட் படத்திற்கு தற்போது மிக முக்கிய மைல்கல் கிடைக்க போகிறது.

தமிழகத்தில் சுமார் 900 திரை அரங்குகள் வரை இருக்கும் சூழலில், கோட் ரிலீஸ் ஆகும் செப்டம்பர் 5 ஆம் தேதி அனைத்து திரை அரங்கிலும் இந்த படத்தை மட்டுமே வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை எந்த தமிழ் திரைப்படமும், தமிழகத்தில் இருக்கும் அனைத்து திரை அரங்கிலும் முதல் நாளில் வெளியானது கிடையாது.

இதனால், ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் குமார் என முன்னணி நடிகர்கள் பலருக்கும் கிடைக்காத பெருமை தற்போது விஜய்க்கு கிடைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் உங்களுக்காக...