ஏஆர் ரகுமானுக்கு எதிராக சதி செய்ததாக வெளியான வீடியோ.. விஜய் ஆண்டனி மறுப்பு

விஜய் ஆண்டனி ஏஆர் ரகுமானுக்கு களங்கம் விளைவிக்க பாஜகவினருடன் சேர்ந்து செயல்பட்டதாக , யூடியூப் சேனல் வீடியோ ஒன்று வெளியிட்டது. விஜய் ஆண்டனி பத்திரிக்கையாளர் ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாவும், தொலைக்காட்சி ஊடகத்தின் கேள்விக்கு…

Vijay Antony denies reports that he acted against AR Rahman

விஜய் ஆண்டனி ஏஆர் ரகுமானுக்கு களங்கம் விளைவிக்க பாஜகவினருடன் சேர்ந்து செயல்பட்டதாக , யூடியூப் சேனல் வீடியோ ஒன்று வெளியிட்டது. விஜய் ஆண்டனி பத்திரிக்கையாளர் ஒருவருக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பியதாவும், தொலைக்காட்சி ஊடகத்தின் கேள்விக்கு பதில் அளிக்காமல் எஸ்கேப் ஆனதாகவும் விஜய் ஆண்டனி மீது அந்த யூடியூப் சேனல் குற்றச்சாட்டியது.

மேலும் சமீபத்தில் பாஜாக யாத்திரைக்காக டைட்டில் பாடலை விஜய் ஆண்டனி கம்போஸ் செய்து கொடுத்தை சுட்டிக்காட்டிய யூடியூப் சேனல், முதலில் ஏஆர் ரகுமானிடம் தான் பாஜக குழுவினர் அணுகினார்கள் என்றும், ஆனால் இசைப்புயல் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் கலந்து கொள்ள மாட்டேன் என உறுதியாக சொல்லிவிட்டதால், அவர்கள் திரும்பி சென்று விட்டனர் என்றும், பின்பு தீனா- கங்கை அமரன் இணைந்து இந்த பாடலை கம்போஸ் செய்ததாகவும், அந்த யூடியூப் சேனல் நடத்துவோர் வீடியோவில் தெரிவித்தனர்.

ஏஆர் ரகுமான் நடத்திய கச்சேரி.. காசு ஆட்டைய போடறதுகுன்னே.. குமுறும் நெட்டிசன்கள்

பாஜக யாத்திரைக்காக பாடலை இசையமைத்துத் தராத கோபத்தால் தான் பாஜகவினர் ஏஆர் ரகுமானுக்கு குறி வைத்ததாகவும், அதனால்தான் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சியில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், அந்த நிகழ்ச்சி பொறுப்பாளரான ஏசிடிசி நிறுவனத்தை சேர்ந்த பவித்ரன் செட்டி என்பவர் பாஜகவினருடன் சேர்ந்து இந்த காரியத்தை செய்துள்ளார் என்றும் யூடியூப் சேனலில் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனிடையே அண்மை காலமாக பாஜகவிற்கு நெருக்கமானவராக மாறி உள்ள விஜய் ஆண்டனியும் இந்த நிகழ்ச்சியின் குளறுபடிக்கு துணை நின்றதாகவும் அந்த தனியார் யூடியூப் சேனலில் குற்றம்சாட்டி உள்ளனர்.

இதனிடையே இந்த வீடியோவை போட்ட தனியார் யூடியூப் சேனல் மீது தற்போது விஜய் ஆண்டனி மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார். யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் முற்றிலும் பொய் என்று கூறியுள்ள அவர், மான நஷ்ட வழக்கில் வரும் தொகை முழுவதையும், நலிவடைந்த இசை துறை நண்பர்களுக்கு கொடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

antony

ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி குளறுபடியில் பல விஷயங்கள் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள். காவல்துறை விசாரித்தால் தான் உண்மை வெளிவரும் என்றும் சொல்கிறார்கள்.