ரஜினிக்கு வில்லனாக மாறுவாரா கமல்.. லோகேஷின் தரமான சம்பவம்!

Published:

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக இயங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களில் சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ஒன்று. சமீபத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி உலகம் முழுக்க வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அனிருத் இசையில் உருவான ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 650 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்து மாபெரும் வெற்றியை கொடுத்துள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை தயாரிப்பதில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது. மேலும் 120 கோடிக்கு மேல் பட்ஜெட்டில் அடுத்தடுத்து நான்கு தரமான படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அந்த வரிசையில் சூப்பர் ஸ்டாரின் 171வது படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் ரஜினி இன்னும் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு நடிப்பிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் ரஜினியின் 171வது படம் தான் அவரின் கடைசி படமாக இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் நிச்சயமாக சூப்பர் ஸ்டாரின் சினிமா வரலாற்றிலேயே சிறந்த படமாக இருக்க வேண்டும் என்பதால் மிகப்பெரிய பொருள் செலவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

அது மட்டுமில்லாமல் தனுஷின் ஐம்பதாவது படமான ராயன் படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது.இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானதை தொடர்ந்து தற்பொழுது படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்திற்கும், இயக்குனர் அட்லி இயக்கத்தில் அடுத்த படத்திற்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த படம் குறித்த முழு தகவலும் இனி வரும் நாட்களில் வெளியாகும். இந்த பெரிய நான்கு இயக்குனர்களின் படங்களை அடுத்தடுத்து பிரம்மாண்டமாக தயாரித்து எதிர்வரும் நாட்களில் நல்ல வசூல் வேட்டையை நடத்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் மாஸாக திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் தலைவரின் 171வது படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஜினி நடிப்பில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் இந்த திரைப்படம் உருவாக உள்ளதாக அந்த அறிவிப்பில் வெளியாக இருந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருட மார்ச் மாதத்தில் தொடங்கி அடுத்த வருடத்தின் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய குழு முடிவெடுத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல் படத்தில் ஓகே சொல்லி… ரஜினி படத்திற்கு நோ சொல்லும் ஃபகத் பாசில்!

தலைவரின் 171வது படத்தின் அறிவிப்பை தொடர்ந்து ரஜினி ரசிகர்கள் இந்த படம் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் கற்பனையின் உச்சத்திற்கு சென்றுள்ளனர். மேலும் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்தின் ரிலீசின் போது அழைத்த பேட்டியில், தான் ரஜினியை வைத்து படம் செய்ய இருப்பதாகவும் அந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று ஆசைப்படுவதாகவும் அவர் கூறினார்.

அந்த வகையில் தற்போது லோகேஷ் ரஜினி வைத்து 171வது படத்தை இயக்க உள்ளதால் இந்த படத்தில் கமல் நடித்தால் அந்த படம் மேலும் ஒரு சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

 

 

மேலும் உங்களுக்காக...