விஜய் கொடுத்த முத்த புகைப்படத்தை பகிர்ந்த பாடலாசிரியர்..!

தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியவர் பாடல் ஆசிரியர் விவேக் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகிய நிலையில் தற்போது பாடல் ஆசிரியர்…

vivek vijay

தளபதி விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தில் திரைக்கதை மற்றும் பாடல்கள் எழுதியவர் பாடல் ஆசிரியர் விவேக் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகிய நிலையில் தற்போது பாடல் ஆசிரியர் விவேக், விஜய் தனக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்

இந்த புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. சில உறவுகள் என்பது வார்த்தைகளை தாண்டியது என்றும் இந்த நம்ப முடியாத பயணத்தில் நீங்கள் என் மீது காட்டிய அன்பும் அரவணைப்பும் என்னை சகோதரன் போல் உணர்த்தியது என்றும் தெரிவித்துள்ளார்.

நான் வேண்டுவதெல்லாம் உங்களைப் போன்ற நல்ல மனிதருக்கு எல்லாம் நன்றாகவே நடக்க வேண்டும் என்றும் என்னுடைய கலை பயணத்தில் இந்த அழகான நாள் போல் வேறு எதுவும் இருக்காது என்றும் வாழ்வில் எல்லாம் உங்களை அன்புடன் இருப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாடலாசிரியர் விவேக்கின் இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.