உலகம் முழுவதும் 200 கோடி பேருக்கு யோகா கற்றுத்தரப்படும்: சத்குரு தகவல்

Published:

உலகம் முழுவதும் 200 கோடி மக்களுக்கு யோகா கற்றுக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக சத்குரு ஜக்கி தெரிவித்துள்ளார்.

கோவையில் ஈஷா யோகா மையத்தில் நேற்று மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. அப்போது அவர் பேசிய போது குடியரசுத் தலைவர் நம்முடன் இருப்பது பெருமிதம் என்றும் உலக அளவில் அதிகரித்து வரும் மன நோயிலிருந்து விடுபட 200 கோடி பேருக்கு எளிய முறையில் யோகா கற்றுத்தர முடிவு செய்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

போதைப் பழக்கம் மற்றும் தீய வழிகளில் இருந்து மக்களை விடுவிக்க யோகா ஒன்றுதான் வழி என்றும் அவர் தெரிவித்தார். இன்று உலக அளவில் உலக சுகாதார நிறுவனம் உள்பட மனநோய் குறித்து பேசி வருகின்றனர் என்பதும் மன நோய்க்கு பெரும்பாலும் போதை பழக்கம் தான் காரணம் என்று அதிலிருந்து மக்களை விடுவிக்க உலகம் முழுவதும் 200 கோடி மக்களுக்கு எளிய முறையில் யோகா கற்றுத்தர அர்ப்பணிப்புடன் செயல்பட உள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் உங்களுக்காக...