இனி ஒரு உசிரும் போகக் கூடாது : படப்பிடிப்பு தளத்தில் அஜீத் எடுத்த அதிரடி முடிவு

By John A

Published:

துணிவு படத்திற்குப் பின் நடிகர் அஜீத் பல முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டுவந்த நிலையில் விக்னேஷ்சிவன் ஏகே 62 படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் கதைக்களம் மற்றும் சில காரணங்களால் டிராப் ஆனது. இதன் பின் அஜீத்தை அடுத்து இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு கூடிய நிலையில் மகிழ்திருமேனிக்கு அடித்தது லக்.

தடையறத்தாக்க, தடம், கலகத்தலைவன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இமைக்கா நொடிகள் படத்தில் அனுராக்காஷ்ய்-க்கு பின்னணி கொடுத்ததன் மூலம் திரையுலகில் கவனிக்க வைத்தார். அதிலும் இவர் லியோ படத்திற்கு முன்னதாகவே ஹைனா கதையை தனது பாணியில் சொல்லி ரசிகர்களை கவனம் ஈர்த்தார்.

Magizh Thirumeni and Ajith Kumar

BIKE-க்காக சண்டை போட்ட சூர்யா-கார்த்தி : ருசிகர தகவல் சொன்ன கார்த்தி

இந்நிலையில் லைகா நிறுவனத்தில் தயாரிப்பில் ஏகே62-ஐ இயக்குவது உறுதிசெய்யப்பட்டு விடாமுயற்சி என்று தலைப்பிடப்படுள்ளது. தற்போது படத்தின் ஷுட்டிங் அஜர்பைஜான் நாட்டில் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது ஷுட்டிங் அப்டேட் போட்டோக்களை வெளியிட்டு வருவதால் படம் எப்போது திரைக்கு வரும் என்று தல ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பைக்கில் உலக சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜீத் தற்போது இப்படத்தின் ஷுட்டிங்கில்  கவனம் செலுத்தி வருவதால் தற்போது பைக் ரைடுக்கு தற்காலிமாக விடை கொடுத்துள்ளார்.

Milan

விடாமுயற்சி படத்தின் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் வேளையில் இப்படத்தின் கலை இயக்குனரான மிலன் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சோகம் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் அஜீத் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளார். அதன்படி விடாமுயற்சி படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் இலவச உடல் பரிசோதனை முகாம் நடத்துமாறும் அவர்களின் நலன்தான் முக்கியம் என்றும் தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்ததாகத் தெரிகிறது.

தளபதி 68 படத்தில் சந்தானம்! புது யுக்தியை கையாளும் வெங்கட் பிரபு!

ஏற்கனவே இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் பலியானதும், மார்க் ஆண்டனி சண்டைக் காட்சி படப்பிடிப்பில் விஷால் காயமடைந்ததும், தங்கலான் படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் காலில் காயமடைந்ததும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு படப்பிடிப்பில் தொடர்ச்சியாக விபத்துகள் நடைபெற்றும் நிலையில் அனைத்து ஷுட்டிங்கில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் தயாரிப்பு நிறுவனங்கள் இன்சூரன்ஸ் செய்துகொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

சினிமா தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன தலைவர் ஆர்.கே. செல்வமணியும் இது குறித்து ஊடகங்களில் கருத்து தெரிவித்திருந்தார்.