பிரேமம் இயக்குநருக்கு இப்படி ஒரு குறைபாடா? : அதிர்ச்சியான மல்லுவுட்

தமிழ் சினிமா கவனிக்கத் தவறிய சாய் பல்லவி என்னும் என்னும் தமிழ்ப் பெண்ணை ஹீரோயினாக மலையாள தேசத்தில் அறிமுகப்படுத்தி கேரளத்து ரசிகர்களை கொண்டாட வைத்தவர் தான் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அதற்கு முன் நேரம் என்ற படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இயக்கி தன்னுடைய இயக்குநர் நேரத்தை சரியாக கணித்தவர்.  நிவின் பாலி, நஸ்ரியா, சார்லி, பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில் உருவான இத்திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது.

உச்சத்திற்கு கொண்டு போன பிரேமம் 

மீண்டும் 2015-ல் நிவின்பாலியை ஹீரோவாக வைத்து எடுக்கப்பட்ட பிரேமம் படம் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நிவின்பாலிக்கு திருப்புமுனையாக அமைந்த இந்த திரைப்படம் தமிழில் சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் பட பாணியில் அமைந்திருந்து.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மலையாளம் தெரியாத தமிழ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது. அதிலும் சாய்பல்லவியின் இயல்பான நடிப்பும், கடவுளின் தேசமான கேரளத்து இயற்கை அழகையும் கண்முன் நிறுத்தி படத்தை மாபெரும் வெற்றியாக்கியது. அதன்பின் மலையாளத்தில் GOLD, தமிழில் பரிசு போன்ற படங்களையும் தனது பாணியில் இயக்கி ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார்.

Premam

இப்படியா போஸ்ட் போடுவீங்க..? பிரியா பவானி சங்கரை கலாய்த்த நண்பர்கள்

ஆளே மாறிய அல்போன்ஸ் புத்திரன்

பிரேமம் என்ற ஒரே படத்தில் மலையாள ஹிட் இயக்குநர்களின் லிஸ்ட்-ல் சேர்ந்த அல்போன்ஸ் புத்திரனின் சமீபத்திய புகைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன் சோசியல் மீடியாக்களில் வைரல் ஆனது. அல்போன்ஸ் புத்திரனுக்கு என்ன ஆனது என்று ரசிகர்கள் கேள்வியெழுப்பிய நிலையில் தற்போது அதற்கு அவரே விடையளித்துள்ளார்.

அவருக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு இருப்பதாகவும் இனி பெரிய படங்கள் இயக்குவதை நிறுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார். ஆனால் குறும்படங்கள் மற்றும் பாடல் வீடியோக்கள் மற்றும் ஓடிடி தளங்களில் தன்னுடைய சினிமா பயணம் தொடரும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் தான் யாருக்கும் பாரமாக இருக்கவில்லை எனவும் பதிவிட்டுள்ளார்.

இவருக்கு இப்படி ஒரு குறைபாடு இருப்பது கண்டு மலையாள ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். விரைவில் அவர் பூரண நலம் பெற்று மீண்டும் பிரேமம் மாதிரியான எவர்கிரீன் ஹிட் படங்களை இயக்க வேண்டும் என்றும் கமெண்ட்களில் பதிவேற்றி வருகின்றனர்.

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.