தளபதி 68 படத்தில் சந்தானம்! புது யுக்தியை கையாளும் வெங்கட் பிரபு!

விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் லியோ திரைப்படம் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது. தற்போது வரை 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ள லியோ திரைப்படம் ஆயிரம் கோடி வரை வசூல் சாதனை செய்யும் என ரசிகர்கள் தரப்பிலிருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தனது அடுத்த படமான தளபதி 68 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் முதன் முதலில் விஜய் இந்த படத்தில் இணைய உள்ளார். இந்த படத்தின் பூஜை வீடியோ கடந்த வாரம் வெளியாகி மக்களிடையே படத்தின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் படத்தில் நடிக்க இருக்கும் அனைத்து நடிகர்களின் அப்டேட் கிடைத்துள்ளது.

பொதுவாக முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்களில் தற்சமயம் ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹீரோயின்கள், வில்லன்கள் என அனைவரும் களமிறங்கி நடிப்பது வழக்கம். ஆனால் தளபதி 68 படத்தில் சற்று மாறுதலாக பழைய ஹீரோ,ஹீரோயின்களின் வருகை அதிகரித்துள்ளது. அதற்கு சான்றாக தளபதி 68 படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, லைலா, சினேகா என 90களில் முன்னணி நடிகர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் மைக் மோகன் முதல் முதலாக நடிக்க உள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி விஜய்க்கு ஜோடியாக இணைய உள்ளார். ஜெயராம், யோகி பாபு, VTV கணேஷ் இந்த படத்தில் நடிக்க உள்ளனர். மேலும் இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஆசான தம்பிகளான அஜ்மல் அமீர்,வைபவ் ரெட்டி,பிரேம்ஜி, அமரன்,அரவிந்த் ஆகாஷ்,அஜய் ராஜ் இவர்களும் இந்த படத்தில் இணைந்து நடிக்க உள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது.

இதற்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய அஜித் படமான மங்காத்தாவிலும் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபுவின் தம்பிகள் கூட்டணி இணைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டணி படத்திற்கு தேவையான அனைத்து சுவாரசியமான காமெடி கதாபாத்திரங்களையும் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு மேலும் ஒரு பலமாக நடிகர் சந்தானம் இணைய இருப்பதாக தகவல் வெளியாக இருந்தது. நடிகர் சந்தானம் தற்பொழுது காமெடி நடிகராக மட்டுமில்லாமல் ஹீரோவாக அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் .இதன் காரணமாக அவர் திரைப்படங்களில் காமெடியனாக நடிப்பதை முற்றிலும் தவிர்த்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் அவருக்கு ஒரு கச்சிதமான கதாபாத்திரம் இருப்பதாக கூறி இயக்குனர் வெங்கட் பிரபு தளபதி 68 படத்தில் நடிக்க சம்மதம் வாங்கியுள்ளார்.

மீண்டும் இயக்குனர் நெல்சன் உடன் இணையும் தளபதி விஜய்.. ரகசிய அப்டேட் இதோ!

ஆனால் காமெடி நடிகர் சந்தானம் அவர்களிடம் கால்ஷீட் இல்லாத காரணத்தினால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். இதேபோல் முன்னதாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் படத்திலும் காமெடியனாக சந்தானம் நடிக்க கமிட் ஆகி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் அஜித் விக்னேஷ் சிவன் திரைப்படம் கைவிடப்பட்டதின் காரணமாக மீண்டும் ஹீரோக்களுடன் இணையும் சந்தானத்தின் வாய்ப்பு குறைய தொடங்கியுள்ளது.

விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்கும் தளபதி 68 திரைப்படம் ஒரு ட்ரெயின் டைம் ட்ராவல் திரைப்படம் என்பதை இயக்குனர் வெங்கட் பிரபு பல இடங்களில் குறிப்பிடும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்பொழுது மக்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...