மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடித்து இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் அஜித்குமார் உடன் த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
வெகு நாட்களுக்கு பிறகு அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் இன்று வெளியானதால் ரசிகர்கள் ஆரவாரத்துடன் இந்த படத்தை கொண்டாடினர். மேலும் இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது இந்த படத்தின் விமர்சனம் என்ன என்பதை பொதுமக்களும் ரசிகர்களும் கூறி இருக்கிறார்கள். அது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் இதுவரை நடிக்காத அளவுக்கு ஒரு வித்தியாசமான படமாக இருக்கிறது. படத்தின் ஸ்கிரீன் பிளே அனிருத் இசை அருமையாக இருக்கிறது. First Half கொஞ்சம் லேக் ஆக இருந்தாலும் செகண்ட் ஹாஃப் மிகவும் விறுவிறுப்பாக சென்றது. அஜித் வழக்கம்போல தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும் திரில்லராக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கும் போது ரொம்ப திரில்லாக இல்லாமல் சஸ்பென்ஸ் என்ன என்பது அடுத்தடுத்து நமக்கு தெரிந்துவிடும் வகையில் தான் இருக்கிறது. ஆனால் மொத்தத்தில் விறுவிறுப்பாக படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை சீட்டு நுனியில் இருந்து பார்க்கும் அளவுக்கு மகிழ் திருமேனி அருமையாக இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார். கண்டிப்பாக இந்த திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று ரசிகர்கள் கூறியிருக்கிறார்கள்.
