வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்து வெளியான மாஸ் அப்டேட்!

Published:

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தை தொடர்ந்து இயக்குனர் வம்சி இயக்கத்தில் ‘ வாரிசு ’ எனும் படத்தில் நடித்துவருகிறார்.விஜய்யின் 66வது படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

வாரிசு திரைப்படம் முழுக்க முழுக்க தமிழ் படம் தான், தெலுங்கில் டப்பிங் செய்து தான் வெளியிடப்படுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தெலுங்கு திரையுலகை சார்ந்தார் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தில் தமன் இசையமைக்கும் படத்தில் 6 பாடல்கள் உள்ளது , இது சென்டிமென்ட் படம் என்றும் இதில் சண்டை காட்சிகள் இல்லை என கூறப்படிகிறது. படத்தில் விஜய்யின் அப்பாவாக சரத்குமார் நடிக்கிறார்.ஷாம், யோகி பாபு, பிரகாஷ் ராஜ், நாசர் என்று பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.

மேலும் வாரிசு படம் பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 2023 இல் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. சமீபத்தில் ரஞ்சிதமே ரஞ்சிதமே விஜய் பாடிய வாரிசு பாடல் முழு லிரிக் வீடியோ வெளியாகியது .இந்த அப்டேடை விஜய் ரசிகர்கள் வைரலாகி கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் பாடல் வெளியாகி பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடலை ‘மொச்சை கொட்ட பல்லழகி’ என்ற பழைய பாடலில் ரீமிக்ஸ் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்ததும் குறிப்பிடத்தக்கது.

விஜயை தொடர்ந்து அஜித் வைத்து மாஸ் காட்ட நினைக்கும் லோகேஷ்! தெறிக்க விடும் அப்டேட்!

இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் குறித்து மாஸான தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதே மாதத்தில் இசை வெளியிட்டு விழா நடைபெறயுள்ளதால் பாடல் முன்னதாக வெளியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

மேலும் உங்களுக்காக...