விஜயை தொடர்ந்து அஜித் வைத்து மாஸ் காட்ட நினைக்கும் லோகேஷ்! தெறிக்க விடும் அப்டேட்!

மாநாடு,கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை கொடுத்து முன்னணி பிரபல இயக்குனராக வளம் வருபவர் லோகேஷ்,சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் 400 கோடி வசூல் சாதனை படைத்துவருகிறது.அதை தொடர்ந்து இவர் விக்ரம் 2,கைதி 2 என பட படங்களை தன வசம் கொண்டுள்ளார்.

இவர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து விஜய் 67 படத்தை இயக்கயுள்ளார்.தமிழை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் தனது அடுத்த ஸ்கிரிப்டை தெலுங்கு நடிகர் பிரபாஸ், ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோரை அணுகி இறுதியாக அல்லு அர்ஜுனை சந்தித்துள்ளார்.

‘புஷ்பா 2’ முடிந்ததும் அவருடன் பணியாற்றுவார் என்றும் திறமையான கோலிவுட் இயக்குனருடன் இணைந்து பணியாற்றுவார் என கூறப்படுகிறது. தற்போழுது விஜய்யின் 67 வது படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்க உள்ளது.

தளபதி 67 படத்தில் நடிகை சமந்தா விஜய்க்கு வில்லியாக சமந்தா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் திரிஷா ஹீரோயினாக நடிகையுள்ளார்.படத்தில் எந்த இசையும் இருக்காது. இந்தத் திரைப்படம் பாடல்களைக் காட்டிலும் பல தீம் மியூசிக்கைப் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தில் 6 வில்லன்கள் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய எதிரியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார் லோகேஷ், அப்போது அவரிடம் அஜித் படங்கள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அஜித் நடித்த படங்கள் குறித்தும் அதில் ஏதாவது படத்தை ரீமேக் செய்வதாக இருந்தால் எந்த படத்தை செய்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

துணிவு படத்திலும் அதே மங்காத்தா கூட்டணியா? வைரலாகும் போட்டோ.. குழப்பத்தில் ரசிகர்கள்!

அதற்கு அவர் அஜித்தின் தீனா படத்தை ரீமேக் செய்யலாம் என பதிலளித்துள்ளார். இந்த பதில் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளது. விஜயை வைத்து மாஸ் படங்களை இயக்கி வரும் வரும் லோகேஷ் அடுத்து அஜித் படத்தை வாய்ப்பு இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் கணித்து வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews