சிவாஜி கணேசன் மற்றும் வாணிஸ்ரீ நடித்த வாணி ராணி என்ற திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்த நிலையில் அந்த படத்தை இயக்கிய இயக்குனர் திடீரென ரத்த வாந்தி எடுத்து இறந்துவிட்டார். அதனைதொடர்ந்து அவருடைய உறவினர் அந்த படத்தை முடிக்க முயற்சி செய்தபோது அவரும் திடீரென மாரடைப்பால் இறந்து விட்டார். இவ்வாறு இரண்டு இயக்குனர்களை காவு வாங்கிய வாணி ராணி திரைப்படம் கடைசியில் சிவாஜியின் ஐடியாபடி சிவி ராஜேந்திரன் இயக்கத்தில் முடிந்தது.
வாணி ராணி திரைப்படம் கடந்த 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. இந்த படம் ஹிந்தியில் சூப்பர் ஹிட் ஆன சீதா அவுர் கீதா என்ற படத்தின் ரீமேக். இந்த படத்தில் சிவாஜி கணேசன் நடிக்க வேண்டும் என விஜய புரடொக்சன்ஸ் குழுவினர் விரும்பினர். இதனையடுத்து சிவாஜி, அந்த இந்தி படத்தை பார்க்க விரும்பினார். அவர் ஹிந்தி படத்தை பார்த்து முடித்தபின் இது எங்க வீட்டு பிள்ளை படத்தின் ரீமேக் மாதிரி இருக்கிறது, இதை ஏன் மீண்டும் நாம் ரீமேக் செய்ய வேண்டும் என்று கூறினார்.
சினிமாவில் சேர ஓட்டலில் டேபிள் துடைத்தவர்.. நடிகர் குள்ளமணியின் அறியாத பக்கங்கள்..!!
எங்கள் வீட்டு பிள்ளை படத்தில் எம்ஜிஆர் நடித்த கேரக்டரில் தான் சீதா, கீதா என இரண்டு வேடத்தில் நாயகி நடித்திருக்கிறார் என்று சிவாஜி கூறினார். மேலும் வாகினி வாகினி புரொடக்சன் நிறுவனம் எங்க வீட்டுப்பிள்ளை படத்தை இயக்கிய இயக்குனர் சாணக்கியாவை இந்த படத்திற்கும் இயக்குனராக புக் செய்தனர் என்பதை கேள்விப்பட்டு அவர் ஆச்சரியமடைந்தார்.
இருப்பினும் வசனகர்த்தா ஆரூர்தாஸ் கட்டாயத்தின் பெயரில் இந்த படத்தில் நடிக்க சிவாஜி ஒப்புக்கொண்டார். ஆனால் அதே நேரத்தில் தனக்கு இந்த படத்தில் நடிக்க பெரியதாக வாய்ப்பு இல்லை என்றாலும் எங்க வீட்டு பிள்ளை படத்தில் எம்ஜிஆருக்கு கொடுக்கப்பட்ட அதே சம்பளம் தனக்கும் வேண்டும் என்று நிபந்தனை விதித்தார்.
முன்னணி நடிகர்கள் இணைந்த ஒரே படம்….. ஹிட் அடிக்காமல் போனதே…..!!
இதனை அடுத்து இந்த படம் வளர்ந்தது, சிவாஜி கணேசன், முத்துராமன், வாணிஸ்ரீ உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படம் வளர்ந்து கொண்டிருக்கும்போது திடீரென இயக்குனர் சாணக்யா ஒரு நாள் ரத்த வாந்தி எடுத்து மரணம் அடைந்தார். இதனை அடுத்து அவரது நெருங்கிய உறவினர் இராமச்சந்திர ராவ் என்பவர் இயக்கத்தில் வாணி ராணி வளர தொடங்கியது. ஆனால் திடீரென அவரும் மாரடைப்பால் ஒரு சில நாட்களில் காலமானார்.
இந்த படம் பாதியில் நின்ற நிலையில் தனது ஆஸ்தான இயக்குனர் சிவி ராஜேந்திரனை வைத்து இந்த படத்தை முடித்துவிடலாம் என்று சிவாஜி ஐடியா கொடுத்தார். ஆனால் பட குழுவினர்களோ ஏற்கனவே இரண்டு இயக்குனர்களை காவு வாங்கி விட்டதால் சிவி ராஜேந்திரனுக்கும் ஏதாவது நேர்ந்துவிடுமோ என்று அச்சமடைந்தனர்.
ஆனால் மூடநம்பிக்கை நம்பிக்கை இல்லாத சி.வி ராஜேந்திரன் இந்த படத்தை இயக்க முன் வந்தார். ஒரு வழியாக இந்த படம் 1974 ஆம் ஆண்டு வெளியானது. வசந்த மாளிகை என்ற திரைப்படத்தில் மிக அருமையாக பாடல்களை கம்போஸ் செய்த கேவி மகாதேவன் இந்த படத்திற்கும் பாடல்கள் கம்போஸ் செய்திருந்தார் என்றாலும் பெரிய அளவில் பாடல்கள் ஹிட் ஆகவில்லை.
நடிகை சுஜாதாவை சுற்றியிருந்த மாயவேலி.. கடைசி வரை திரையுலகினர்களுக்கு புரியாத மர்மம்..!
படம் வெளியான பிறகு இந்த படத்தை எங்க வீட்டு பிள்ளை படத்தை மீண்டும் பார்ப்பது போல் இருந்தது என்று பலர் விமர்சனம் செய்தனர். இதனால் இந்த படம் சுமாரான வெற்றியை பெற்றது. மொத்தத்தில் இரண்டு இயக்குனர்களை காவு வாங்கிய படம் என்ற மோசமான பெயரை மட்டுமே இந்த படம் பெற்றது.