சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஆசைப்பட்ட அஜித்! வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட சம்பவம்!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் இந்த மாதம் 10-ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்து பான் இந்திய திரைப்படமாக வெளியாக உள்ளது.

ஏற்கனவே படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வரும் நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியின் குட்டி ஸ்டொரிக்கு பின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து உள்ளது. படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளார்.

ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளுடன் இயல்பான நெல்சன் படங்களை போன்று காமெடி காட்சிகள் நிறைந்து இந்த படம் உருவாகியுள்ளது. தற்பொழுது படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகின்றது. அந்த வகையில் படத்தில் இருந்து விதவிதமான போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. மேலும் பெரிதும் எதிர்பார்ப்பில் படம் ஃப்ரீ புக்கிங் பட்டைய கிளப்பில் வருகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் டைட்டில் யாருடையது என்னும் கேள்வி தான் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்காக உள்ளது. என்னதான் ரஜினிக்கு தற்போது வயதானாலும் தமிழ் சினிமாவில் எப்போதுமே நிரந்தர சூப்பர் ஸ்டார் அவர்தான் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகின்றார்கள்.

சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இருந்து வெளியான ஹுக்கும் என்னும் பாடல் வெளியானது. இப்பாடலில் இடம் பெற்றுள்ள வரிகள் விஜய் ரசிகர்களை சீண்டி உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். இது ரசிகர்களின் மோதலை மீண்டும் அதிகரித்து உள்ளது.

நடிகர் அர்ஜுனிடம் சில்க் ஸ்மிதா கேட்ட அந்த ஒரு கேள்வி! கடைசியில் என்ன நடந்தது?

இந்த நிலையில் நடிகர் அஜித் சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து பேசிய வீடியோ தான் தற்பொழுது வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு அஜித் ஒரு மேடையில் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வேண்டும் என ஆசைப்படுவதாக கூறினாராம். இதை எடுத்து அவர் பல விமர்சனங்களை சந்தித்துள்ளார்.

நான் சூப்பர் ஸ்டார் இடத்தை அடைய ஆசைப்படுவதாக கூறினேன், அதன் பிறகு பல விமர்சனங்களை சந்தித்தேன் என்றார் அஜித். அது தற்போது சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் இந்த பழைய பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

 

 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...