தமிழ்சினிமாவில் வந்த மாமா படங்கள் – ஒரு பார்வை

Published:

மாமன் என்றாலே இளைஞர்களுக்கு குஷி தான். மாமன் தானே பொண்ணு தருபவர் என்று அவருக்கு ஏகப்பட்ட மரியாதையைக் கொடுப்பார்கள். சிலர் நக்கலும், நையாண்டியையும் கலந்து மாமனுக்கு மரியாதை தருவர்.

மற்ற உறவுக்காரர்கள் வீட்டுக்குப் போகிறார்களோ, இல்லையோ மாமா வீட்டுக்கு மட்டும் அடிக்கடி போவார்கள். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ராஜாதி ராஜா படத்தில் பொண்ணு தர மறுக்கும் மாமனிடம் நேராகப் போய் மாமா உன் பொண்ணக் கொடு என்று தைரியமாகப் பாடி ஆடி அசத்துவார். அந்தக் காலத்தில் இது இளைஞர்களுக்குக் கொண்டாட்டம் நிறைந்த பாடலாக இருந்தது.

அந்த வகையில் தமிழ்ப்படங்களில் மாமனை மையமாகக் கொண்டு வந்த படங்கள் பல உள்ளன. அவற்றில் இன்னும் ஒரு படி மேல் போய் தலைப்பையே மாமனின் பெயராகக் கொண்டு வந்துள்ளன. அதிலும் புரட்சித்தமிழன் சத்யராஜ் படங்கள் தான் அதிகம்.

அதிலும் கவுண்டமணி, சத்யராஜ் காமெடி நல்லா ஒர்க் அவுட் ஆகும். சத்யராஜ் மாம்ஸ் என்பதும், கவுண்டமணி மாப்ளே என்பதும் செம கலாயாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களுள் சிலவற்றைப் பார்ப்போம்.

எங்க மாமா

Enga Maama
Enga Maama

1970ல் ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான படம். நடிகர் திலகம் சிவாஜிகணேசன், ஜெயலலிதா உள்பட பலர் நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் செம மாஸ். குறிப்பாக எல்லோரும் நலம் வாழ, செல்லக்கிளிகளாம் என்ற பாடல் அனைத்துத் தரப்பு ரசிகர்களாலும் பெரிதும் வரவேற்கப்பட்டது.

மாமனுக்கு மரியாதை

mm1
mm1

வினோத் சான் இசை அமைத்து இயக்கியுள்ள காமெடி படம். பாரத், வினோத் சான், டெல்லி கணேஷ், கிருஷ்ணா, நிரஞ்சன், சா சதிஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மாமன் மகள்

MMgl
MMgl

1995ல் குருதனபால் இயக்கத்தில் புரட்சித்தமிழன் சத்யராஜ் நடித்த சூப்பர்ஹிட் படம். ஆதித்யன் இசை. மீனா, கவுண்டமணி, மனோரமா உள்பட பலர் நடித்து அசத்தினர். இந்தப் படத்தில் சில காட்சிகளில் சத்யராஜ் அச்சு அசல் பெண் போன்ற வேடத்தில் வந்து அசத்துவார்.

ரிக்ஷா மாமா

1992ல் பி.வாசுவின் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம். சத்யராஜ், கௌதமி, குஷ்பூ, பேபி ஸ்ரீதேவி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. இந்தப் படம் 100 நாள்களைக் கடந்து ஓடிமாபெரும் வெற்றி பெற்றது.

டேவிட் அங்கிள்

David Uncle
David Uncle

இந்தப் படத்தில் ஆனந்த ராஜ் ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். அவருடன் இணைந்து சிவா, சிவரஞ்சனி, கவுண்டமணி, செந்தில், சில்க், ராஜீவ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆதித்யன் இசை அமைத்து குணா இயக்கியுள்ள படம்.

மேலும் உங்களுக்காக...