தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்க உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளது. தனுஷ் 43’ என்று அழைக்கப்படும் இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சற்று முன் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைப்பக்கத்தில் ’தனுஷ் 43’ படத்திற்கான இரண்டு பாடல்களை கம்போஸ் செய்து முடித்துவிட்டதாக அறிவித்துள்ளார். மேலும் இந்த பாடல்களை ஒரு பிரபலம் இயற்றி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் தனுஷ் நடித்து முடித்துள்ள ’ஜகமே தந்திரம்’ மற்றும் ’கர்ணன்’ ஆகிய திரைப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது