தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15ஆம் தேதி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 15ஆம் தேதி மாலை 6.30மணி முதல் இந்த இசை வெளியீட்டு விழாவை சன் டிவி நேரடியாக ஒளிபரப்ப உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் முண்டியடித்து சென்று இசை வெளியீட்டு விழாவை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதும் வீட்டில் உட்கார்ந்தபடியே சன் டிவியில் தளபதியை பார்த்து ரசிக்கலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது