த்ரிஷாவின் ‘ராங்கி’ மொக்கையா? திரைவிமர்சனம்

By Bala Siva

Published:

த்ரிஷா நடித்த ’ராங்கி’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படம் குறித்த விமர்சனத்தை தற்போது பார்ப்போம்.

துணிச்சல் மிக்க பத்திரிகையாளர் கேரக்டரில் த்ரிஷா நடித்துள்ளார். ஃபேஸ்புக் கணக்கை பயன்படுத்தி ஆண்களுடன் நெருக்கமாக பேசி வரும் பெண் ஒருவர் அந்த போலி கணக்கில் த்ரிஷாவின் அண்ணன் மகளின் புகைப்படத்தை வைக்கின்றார்.

அந்த பெண் பேசி வந்த ஆண்களில் ஒருவர் வெளிநாட்டு தீவிரவாதி என்பது தெரியவந்துள்ளதை எடுத்து அதை த்ரிஷா கண்டுபிடித்து தனது அண்ணன் மகளை பிரச்சனையில் இருந்து மீட்க களத்தில் இறங்குகிறார்.

ஒரு பத்திரிகையாளராக இருந்து கொண்டு ஆபத்தை நோக்கி சென்று தனது அண்ணன் மகளை துணிச்சலுடன் காப்பாற்றும் கேரக்டரில் த்ரிஷா நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தில் த்ரிஷா கேரக்டர் வடிவமைத்து அளவுக்கு வில்லன் கேரக்டர் வலுவாக வடிவமைக்க வில்லை என்பதும் திரைக்கதை மிகவும் மெதுவாக நகர்வது என்பது மிகப் பெரிய மைனஸ் ஆக உள்ளது.

மேலும் தீவிரவாதி கேரக்டரில் நடித்தவருக்கு மிகச் சிறப்பான நடிப்பு என்றாலும் அவரது கேரக்டர் வெகு சுமாரான அமைக்கப்பட்டுள்ளது. தீவிரமாக அரசியல் செய்பவன் அரசியல்வாதி, தீவிரமாக போராடுபவன் தீவிரவாதி, ஜெயிச்சா தான் நாம போராளிகள், தோத்தா தீவிரவாதிகள் என நெத்தியடி வசனங்கள் இந்த படத்தை பார்க்க காரணங்களாக உள்ளன.

ஆனால் அதே நேரத்தில் படத்தின் திரைக்கதை மிகவும் மந்தமாக இருப்பதால் படம் மெதுவாக நகர்கிறது . பாடல்களும் பெரிதாக மனம் கவர வில்லை என்பதும் பின்னணி இசையும் சுமாராக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொத்தத்தில் பேஸ்புக் மூலம் ஏற்படும் அபாயங்களை நாட்டு மக்களுக்கு சொல்வதற்காக எடுக்கப்பட்ட படம் என்ற வகையில் பாராட்டப்பட்டாலும் இந்த படத்தின் கேரக்டர்கள் மற்றும் திரைக்கதை மிகவும் வீக்காக இருப்பதாகவே கணிக்கப்படுகிறது.